டிவிட்டரில் மாஸ் காட்டும் ரிசர்வ் வங்கி.. இந்திய மக்கள் சபாஷ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் பாதிப்படைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கப் பல முக்கிய முயற்சிகளை எடுத்தும் வரும் இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கில் சுமார் 10 பாலோவர்களைப் பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளது.

 

உலகிலேயே பல சக்திவாய்ந்த மத்திய வங்கிகளும், பல சக்திவாய்ந்த பொருளாதாரா நாடுகள் இருக்கும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கு தான் முதல் முறையாக 1 மில்லியன் அதாவது 10 லட்ச பாலோவர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் ஒன்றாக உள்ளது.

டெலிகாம் கட்டண உயர்வு அவசியம், இல்லைன்னா அவ்வளவுதான் : ஏர்டெல் சுனில் மிட்டல்டெலிகாம் கட்டண உயர்வு அவசியம், இல்லைன்னா அவ்வளவுதான் : ஏர்டெல் சுனில் மிட்டல்

1 மில்லியன் பாலோவர்ஸ்

1 மில்லியன் பாலோவர்ஸ்

செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை 9.66 லட்சமாக இருந்த நிலையில், நவம்பர் 22ஆம் தேதி இதன் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 2020-21 மட்டும் ரிசர்வ் வங்கி டிவிட்டர் கணக்கை சுமார் 2.5 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

அதுக்குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் கணக்கில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கு 10 லட்சம் பாலோவர்களைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய உயரத்தை அடைந்துள்ளோம். இந்தத் தருணத்தில் ரிசர்வ் வங்கியில் என்னுடன் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா
 

அமெரிக்கா, ஐரோப்பா

இந்திய ரிசர்வ் வங்கி டிவிட்டரில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை அடைந்தது மூலம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கிய மத்திய வங்கிகளைத் தாண்டி டிவிட்டர் உலகில் மிகலும் பிரபலமான மத்திய வங்கி என்ற பெயரை வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

85 வருடம்

85 வருடம்

இந்தியாவில் சுமார் 85 வருடமாக இயங்கி வரும் ரிசர்வ் வங்கி ஜனவரி 2012ஆம் ஆண்டு தான் டிவிட்டர் கணக்கைத் துவங்கியது. ஆனால் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் மார்த் 2009லும், ஐரோப்பிய மத்திய வங்கி அக்டோபர் 2009லும் டிவிட்டரில் அறிமுகமானது.

ஆனாலும் இந்திய ரிசர்வ் வங்கி முதலாவதாக 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

 

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தகச் சந்தை மேம்பாட்டிற்காகவும் ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ விகிதத்தின் குறைப்பின் மூலம் தற்போது சந்தை 15 வருடக் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI reached 1 million subscribers on Twitter: first central bank to achieve this milestone

RBI reached 1 million subscribers on Twitter: first central bank to achieve this milestone
Story first published: Sunday, November 22, 2020, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X