ATM கார்டு விதிகள் மாற்றம்.. இன்று முதல் அமல்.. யாருக்கு என்ன பயன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் வங்கியில் க்யூவில் நின்று பணம் எடுக்க பல மணி நேரம் காத்திருந்து, பின்னர் பணம் எடுக்கும் முறையினை மக்கள் பின்பற்றி வந்தனர்.

 

ஆனால் இன்றோ வீதிகளில் ஆங்காங்கே மூலைக்கொரு ஏடிஎம் சேவை மையங்கள். அதெல்லாவற்றையும் விட உள்ளங்கையிலேயே உலகத்தினை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு இணைய சேவைகள் என பலவற்றினை உபயோகித்து வருகின்றனர்.

இதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு பணம் அனுப்பும் முறைகளும் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் குடியுரிமை மற்றும் குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை

ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அதே நேரத்தில் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கத் தான் ஆர்பிஐ இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் படி ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவைகளின் வசதிகளையும் பாதுகாப்பினையும் அதிகரிக்க, இனி கார்டுகளில் எந்த மாதிரியான சேவைகள் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது, அதே போல வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதை கூட தீர்மானிக்கும் வகையில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இதையெல்லாம் இனி நீங்களே தேர்தெடுக்கலாம்

இதையெல்லாம் இனி நீங்களே தேர்தெடுக்கலாம்

மேலும் டெபிட் கார்ட் மூலம், எவ்வளவு பணத்தை தன் கார்டில் இருந்து பயன்படுத்த முடியும், பணப் பரிமாற்றத்தை உள்நாட்டில் மட்டும் செய்யலாமா அல்லது வெளிநாட்டிலும் செய்யலாமா, பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பயன்படுத்துவது, ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு தன் கார்டை பயன்படுத்தலாமா என்பதை எல்லாம் கார்டு உரிமையாளரே இன்று முதல் தீர்மானிக்க முடியும்.

இதை நீங்களே செய்து கொள்ள வேண்டும்
 

இதை நீங்களே செய்து கொள்ள வேண்டும்

அதனுடன் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைக் கொடுக்கும் போது, ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பிஓஎஸ் போன்ற contact based points-களில் மட்டும் செயல்படும் விதத்தில் கொடுக்கச் சொல்லியுள்ளது ஆர்பிஐ. ஆனால் நமக்கு தேவை என்றால் காண்டாக்ட் லெஸ் பரிமாற்றங்கள் வழியாக பணப் பரிமாற்றங்களைச் செய்ய நாம் தான் மேனுவலாக, இனி இயக்க வேண்டி இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிய விதிகள் அமல்

இன்று முதல் புதிய விதிகள் அமல்

ஏடிஎம், பிஓஎஸ், ஆன்லைன் பரிமாற்றம், காண்டாக்ட் லெஸ் பரிமாற்றம் உள்ளிட்ட முறைகளை கார்டு உரிமையாளர்களே Enable / Disable செய்ய அனுமதிக்க வேண்டும். தங்கள் கார்டுகள் வழியாக பணப் பரிவர்த்தனைகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்க அல்லது பணப் பரிவர்த்தனை இலக்குகளை கார்ட் உரிமையாளர்களே மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். மேலும் இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் என இரண்டுக்குமே நாம் தான் மாற்றம் செய்ய வேண்டும். ஆக இப்படி ஒரு நிலையில் தான் இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதை முடக்க வேண்டும்

இதை முடக்க வேண்டும்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இன்று அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளை, இனி கொடுக்க இருக்கும் புதிய கார்ட்கள் மட்டுமின்றி, மறுபடியும் பெறும் கார்டுகளுக்கும் இதே நடைமுறை தான் பின்பற்றபடுமாம். மேலும் ஏற்கனவே ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், இதுவரை ஒரு முறை கூட சர்வதேச பணப் பரிவர்த்தனைகளோ அல்லது காண்டாக்ட் லெஸ் டிரான்சாக்ஷன்களையோ செய்யவில்லை என்றால், கட்டாயமாக அந்த வசதிகளை முடக்க சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.

இனி எல்லாம் இப்படி தான்

இனி எல்லாம் இப்படி தான்

ஆக இன்று முதல் புதிதாக வழங்கப்படும் கார்டுகளுக்கு மேற்கூறிய இந்த புதிய விதிகள் பொருந்தும். இதே பழைய கார்டுகளை கொண்டவர்கள், மேற்கூடிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றை முடக்கலாமா என்பதையும் தீர்மானிக்க முடியும். இதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் அனைத்து வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஆனால் இனி வாடிக்கையாளர்களின் வேண்டுகோள் படி தான் வழங்கப்படும்.

சேவைகள் தானாக நிறுத்தப்படும்

சேவைகள் தானாக நிறுத்தப்படும்

மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பு இல்லாத பரிவர்த்தனை அல்லது அட்டையுடன் சர்வதேச பரிவர்த்தனை செய்யாத டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு தானாக இந்த சேவைகள் தானாக நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

24 மணி நேர சேவை முடக்கம்

24 மணி நேர சேவை முடக்கம்

இதைப் போலவே அனைத்து வங்கிகளும் நெட் பேங்கிங் விருப்பத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ஆக இது ஒரு நாளைக்கு 24 மணி நேர சேவை என்பதையும், எல்லா நாட்களும் என்ற சேவையை முடக்கி வைக்கிறது. மேலும் அட்டைகளில் வாடிக்கையாளர் ஏதேனும் மாற்றத்தினை செய்தால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் எச்சரித்து தகவல்களை அனுப்பும்.

முக்கியத்துவம் பெறலாம்

முக்கியத்துவம் பெறலாம்

அதே போல ஏற்கனவே உள்ள அட்டைகளில் அட்டை இல்லாத பரிவர்த்தனைகள் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை), சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் ஆகியவற்றினை முடக்கலாமா என்பது குறித்து வழங்குனர்கள் ஒரு முடிவை எடுக்கலாம். ஆக இதனால் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில் நிச்சயம், ஆர்பிஐயின் இந்த அறிவுறுத்தல்கள் முக்கியத்துவம் பெறலாம். ஆக இதையும் பின்பற்றித் தான் பாருங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI’s new rules for debit and credit cards effect from today

RBI’s new rules for debit and credit cards come into effect from today, so today onwards the cards will be enabled for contact based points of usage only.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X