வங்கிகளின் மோசமான கடன் விகிதம் 20 வருடங்களில் இல்லாத அளவு அதிகரிக்கும்.. NPA 4% அதிகரிக்கும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் உள்ள நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பானது, நடப்பு நிதியாண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால், அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக, அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்சாலைகள் மற்றும் ஆலைகள் என அனைத்தும் முடங்கின. இதன் காரணமாக பெருத்த பொருளாதார நெருக்கடியான நிலையே நிலவி வருகிறது.

வங்கிகளின் மோசமான கடன் விகிதம் 20 வருடங்களில் இல்லாத அளவு அதிகரிக்கும்.. NPA  4% அதிகரிக்கும்!

இதனால் நிறுவனங்கள் மற்றும் தொழில் சாலைகள் என பலவும் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இதே தனி நபர் கடன்கள் என பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 8.5 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதமானது, நடப்ப நிதியாண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதே நிலவி வரும் நெருக்காடியான நிலையானது இன்னும் மோசமடையும் பட்சத்தில் வாராக்கடன் மதிப்பானது 14.7 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பானது 11.3 சதவீதத்தில் இருந்து 15.2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே தனியார் வங்கிகளின் வாரக்கடன் மதிப்பானது 4.2 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாகவும் அதிகரிக்கா வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதே வெளி நாட்டு வங்கிகளின் வாராக்கடன் மதிப்பானது 3.9 சதவீதமாகவும் அதிகரித்தும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாராக்கடன் விகிதமானது நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி, ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வாராக்கடன் மதிப்பானது கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டுக்காக கடந்த 201-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தரவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இதோடு முந்தைய ஆண்டுகளை விட, நடப்பு நிதியாண்டில் லாப விகிதங்கள் குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கடன் தொகை திரும்ப செலுத்துவதற்கான கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் லாப விகிதம் குறையலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI says Indian banks bad loans may climb 20 year high, NPA may high 4%

Coronavirus impact.. RBI says Indian banks bad loans may climb 20 year high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X