நவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல வங்கிகளில் பல்வேறு நிர்வாக குறைபாடுகள், விதிமீறல்கள், நிதி மோசடிகள் ஆகியவற்றின் மூலம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் இயங்கி வரும் வங்கிகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறது.

 

அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..! என்ன நடக்குது..?! அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..! என்ன நடக்குது..?!

இது மட்டும் அல்லாமல் வங்கிகள் சிறு விதிமீறல்கள் செய்திருந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டு பொது வெளியில் வங்கி செய்த விதிமீறல்கள் மற்றும் அபராதம் விதிப்பு குறித்து வெளியிட்டு வெளிப்படை தன்மை உடன் இயங்கி வருகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் மோசமான நிலையில் இருக்கும் வங்கிகளை தடை செய்து வங்கிகள் இயங்குவதில் இருந்து முடக்கி, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. அப்படி கொண்டு வரப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பணம் அளிக்காமல் உள்ளது ரிசர்வ் வங்கி.

DICGC அமைப்பு

DICGC அமைப்பு

ஒரு வங்கி திவால் ஆகும் பட்சத்தில் அவ்வங்கியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு DICGC அமைப்பின் 5 லட்சம் ரூபாய் அளவிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு தொகை திருப்பி அளிக்கப்படும். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை ரிசர்வ் வங்கி தத்தம் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகை அளிக்காமல் உள்ளது.

10,000 கோடி ரூபாய்
 

10,000 கோடி ரூபாய்

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வருகிற நவம்பர் மாதத்திற்குள் திவாலான வங்கி அல்லது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த வங்கி கணக்காளர்களுக்கு 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகை பட்டுவாடா செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

PMC வங்கி, குரு ராகவேந்திரா வங்கி

PMC வங்கி, குரு ராகவேந்திரா வங்கி

இந்த அறிவிப்பு மூலம் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த PMC வங்கி, குரு ராகவேந்திரா சாஹாகாரா வங்கியின் தகுதி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் வைக்கப்பட்டு இருந்த தொகையை DICGC பாதுகாப்பு அடிப்படையில் நவம்பர் மாதத்திற்குள் பண பட்டுவாடா செய்யப்படும் என அறிவித்துள்ளது.

முதற்கட்ட ஆய்வு

முதற்கட்ட ஆய்வு

தற்போது DICGC அமைப்பு செய்யப்பட்டு முதற்கட்ட ஆய்வில் தகுதி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு தோராயமாக 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகை பட்டுவாடா செய்யப்படும் நிலை இருக்கும் என கணித்துள்ளது. இதன் மூலம் பல மாதங்களாக பணத்தை பெற முடியாமல் இருக்கும் பல கோடி வாடிக்கையாளர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பாதுகாப்பு

5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பாதுகாப்பு

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளுக்கு DICGC அமைப்பின் 5 லட்சம் ரூபாய் அளவிலான பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பாதுகாப்பு மூலம் வங்கிகள் திவால் ஆனால் வாடிக்கையாளர்கள் தத்தம் வங்கியில் செய்யப்பட்ட டெப்பாசிட் தொகையை திரும்ப பெற முடியும்.

டெபாசிட் தொகை

டெபாசிட் தொகை

DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படுவதால் வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே டெப்பாசிட் செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெஸ்ட்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெஸ்ட்

நீங்கள் 5 லட்சம் ரூபாய்க்கு அதிதமாக தொகையை டெப்பாசிட் செய்ய வேண்டும் என்றால் பல வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்யலாம். பொதுவாக தேசியமயமாக்கப்பட்ட முன்னணி வங்கிகளில் முதலீடு செய்தால் அதிகப்படியான பாதுகாப்பை பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI will pay around 10,000 crore to moratorium banks like PMC by November

RBI will pay around 10,000 crore to moratorium banks like PMC by November
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X