விரைவில் "டிஜிட்டல் ரூபாய்" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி ஏற்படுத்திய தாக்கம் வல்லரசு நாடுகளை டிஜிட்டல் கரன்சி வெளியிடுவதற்கு மிகவும் குறுகிய காலகட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது என்றால் மிகையில்லை. சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனா டிஜிட்டல் கரன்சியை மக்களின் பயன்பாட்டு அறிமுகம் செய்து அசத்தியது.

 

சீனா-வை தொடர்ந்து கடந்த வாரம் ஐரோப்பாவும் டிஜிட்டல் யூரோ-வை அறிமுகம் செய்து வல்லரசு நாடுகள் போட்டியில் சேர்ந்தது. ஏற்கனவே அமெரிக்கா டிஜிட்டல் டாலர் திட்டத்தில் பணியாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வரமுடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் கேந்திரா.. அமேசான்.காம் இந்தியாவில் துவங்கிய புதுச் சேவை..!டிஜிட்டல் கேந்திரா.. அமேசான்.காம் இந்தியாவில் துவங்கிய புதுச் சேவை..!

 டிஜிட்டல் ரூபாய் @ டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் ரூபாய் @ டிஜிட்டல் கரன்சி

இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சி திட்டத்தைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை வகுத்து வருகிறது என ஆர்பிஐ துணை கவர்னர் டி ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடிய விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அதாவது டிஜிட்டல் ரூபாய் திட்டத்தைச் சோதனை திட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் சில காலம் காத்திருக்க வேண்டும். குறிப்பாகச் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி திட்டத்திற்குக் கூடுதலான காலம் தேவைப்படும் என ஆர்பிஐ துணை கவர்னர் டி ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.

 சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி
 

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி

இந்தியாவில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை அமலாக்கம் செய்யும் பட்சத்தில் முன் ஏற்பாடு பலவற்றைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தைச் செயல்படுத்தும் போது பேமெண்ட் சிஸ்டம் உச்ச நிலையில் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.

 ஆர்பிஐ துணை கவர்னர் ரபி சங்கர்

ஆர்பிஐ துணை கவர்னர் ரபி சங்கர்

மேலும் டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு, சேமிப்பு, பரிமாற்றம் என அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரைமுறையை உருவாக்கி வருகிறோம் எனவும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் தெரிவித்துள்ளார்.

 மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

உலகளவில் தற்போது சீனா, ரஷ்யா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உடன் சேர்த்து மொத்தம் 86 சதவீத மத்திய வங்கிகள் டிஜிட்டல் நாணயத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்து வருகிறது. இதில் 14 சதவீத மத்திய வங்கி சோதனை கட்டத்தில் உள்ளது.

 என்ன நன்மை

என்ன நன்மை

டிஜிட்டல் கரன்சி கொண்டு வருவதால் என்ன நன்மை

1. பணத்தை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை
2. பணம் அச்சிடும் நிதி செலவுகள் குறையும்
3. அனைத்து விதமான பரிமாற்றத்தை எவ்விதமான தடையும் இல்லாமல் செய்ய முடியும்.
4. வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தைத் தங்கு தடையில்லாமல் செய்ய முடியும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI working on a framework for Digital Rupee like China and Europe: Pilot test in near future

RBI working on a framework for Digital Rupee like China and Europe: Pilot test in near future
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X