கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் துறை.. சென்னை நிலவரம் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல துறைகள் 2022 ஆம் ஆண்டில் பல தடுமாற்றங்களையும் real estate 2022, பாதிப்புகளையும் சந்தித்தாலும் ரியல் எஸ்டேட் துறை மட்டுமே தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அதிலும் குறிப்பாக டாப் 7 பெரு நகரங்களில் ஆடம்பர வீடுகள் விற்பனையும், 2ஆம் தர நகரங்களில் கமர்சியல் ரியல் எஸ்டேட் பிரிவும் அதிகப்படியான வர்த்தகத்தையும், முதலீட்டையும் பெற்று உள்ளது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறை எப்படி இருந்தது என Anarock அமைப்பு ஆய்வு செய்து முழு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

பங்குகள் Vs ரியல் எஸ்டேட்.. இந்தியாவில் எது சிறந்தது? பங்குகள் Vs ரியல் எஸ்டேட்.. இந்தியாவில் எது சிறந்தது?

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சொத்து விலைகள் அதிகரிப்பு மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்ட போதிலும், டாப்-7 நகரங்களில் வீட்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டி சாதனைப்படைத்துள்ளது. ஆனால் 2023ல் இதே டிரெண்ட் தொடருமா என்றால் கட்டாயம் இல்லை என்பது தான் உண்மை.

டாப்-7 நகரங்கள்

டாப்-7 நகரங்கள்

2022 ஆம் ஆண்டில் நாட்டின் டாப்-7 நகரங்களில் வீட்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டி 2014 ஆம் ஆண்டின் பதிவு செய்யப்பட்ட முந்தைய அதிகபட்ச அளவை தாண்டியுள்ளதாக Anarock அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

364,900 வீடுகள் விற்பனை

364,900 வீடுகள் விற்பனை

2022 ஆம் காலண்டர் ஆண்டில் இந்தியாவின் டாப்-7 நகரங்களில் சுமார் 364,900 வீடுகள் விற்பனையாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் டாப் 7 நகரங்களில் 236,500 வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் சுமார் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

2014 ஆண்டு அளவு

2014 ஆண்டு அளவு

Anarock அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டில் டெல்லி என்சிஆர் பகுதி (NCR), மும்பை பெருநகரப் பகுதி (MMR), பெங்களூரு, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் 343,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் புதிய உச்சத்தை அடைந்திருந்தது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

இந்த நிலையில் 2022 ஆம் காலண்டர் ஆண்டில் இந்தியாவின் டாப்-7 நகரங்களில் சுமார் 364,900 வீடுகள் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.

மும்பை, என்சிஆர்

மும்பை, என்சிஆர்

இந்த 7 நகரங்களில் மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 1,09,700 வீடுகள் விற்பனையாகி அதிக வீடுகளை விற்பனை செய்யப்பட்ட பகுதியாக மும்பை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து என்சிஆர் பகுதியில் 63,700 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இந்திய ரியல் எஸ்டேட்-ன் ஹாட்ஸ்பாட் ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, கொல்கத்தா

சென்னை, கொல்கத்தா

இந்த 7 நகரங்கள் கொண்ட பட்டியலில் சென்னையில் 16,100 வீடுகளும், கொல்கத்தாவில் 21,200 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுக் கடைசி இரண்டு இடத்தைப் பிடித்துள்ளது. ஆனாலும் 2014 ஆம் ஆண்டு அளவை ஒட்டுமொத்தமாக முந்தியது முக்கியமானதாக உள்ளது.

ரியல் எஸ்டேட் துறை கலக்கல்

ரியல் எஸ்டேட் துறை கலக்கல்

இந்திய முழுவதும் சொத்து விலைகள் உயர்வது வாயிலாகவும், வட்டி விகித உயர்வும், சர்வதேச அளவிலான பல பிரச்சனைகள், போன்ற பல முக்கியப் பிரச்சனைகள் இருந்த போதிலும் 2022 ஆம் ஆண்டுக் குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறைக்கு அற்புதமான ஆண்டாக உள்ளது. 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ல் புதிய வெளியீடுகள் அளவுகள் கட்டுப்படுத்தப்பட்டது.

2023ல் எப்படி இருக்கும்..?

2023ல் எப்படி இருக்கும்..?

2022 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு பாதிப்புகள் அனைத்தும், பெரும் பகுதி பாதிப்பை நடப்பு ஆண்டின் 2வது பகுதியில் தான் வந்தது. ஆனாலும் 2022 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் மட்டும் 92,160 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Real Estate 2022: Mumbai, NCR tops in Housing Sales; Chennai, Kolkatta trails; breached 2014 numbers

Real Estate 2022: Mumbai, NCR tops in Housing Sales; Chennai, Kolkatta trails; breached 2014 numbers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X