831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபலமான சீனாவின் ஸ்மார்போன் பிராண்டான ரியல்மி, மிக வேகமாக வளர்ந்து வரும் 5ஜி ஆண்ட்ராய்ட் போன்களில் ஒன்றாக உள்ளது.

இது சர்வதேச அளவில் மிக பிரபலமான பிராண்டாக இருந்து வரும் ரியல்மி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 831% வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 121% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

6 வருடத்தில் இல்லாதளவு வீழ்ச்சி..இது வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!6 வருடத்தில் இல்லாதளவு வீழ்ச்சி..இது வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி

மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி

இது குறித்தான கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின் படி, மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ, விவோ, ஜியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள், கடந்த ஆண்டினை காட்டிலும், முறையே 165%, 147% 134% மற்றும் 70% வளர்ச்சியினை கண்டுள்ளது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

ரியல்மி-யின் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது எனலாம். குறிப்பாக வளர்ந்து வரும் சந்தையில் அதன் 5ஜி தொழில் நுட்பம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இதன் எதிர்கால வளர்ச்சியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு
 

இலக்கு

இது குறித்து ரியல்மி-யின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான SKY LI, உலகளவில் 100 மில்லியன் இளைஞர்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தின் உதவியினை வழங்குவதே எங்கள் இலக்கு. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான பயனுள்ள, பல்வேறு மாடல்களில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம்.

பிடித்தமான மாடல்கள்

பிடித்தமான மாடல்கள்


இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பான 5ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தினை வழங்குவோம். இன்னும் எங்களது 5ஜி சலுகைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

இது வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான பல்வேறு மாடல்கள், தொழில் நுட்பத்துடன் கொடுப்போம் என்றும் ரியல்மி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 முன்னிலை யார்?

முன்னிலை யார்?

இன்றைய காலகட்டத்தில் என்னதான் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்தாலும், இன்றும் சந்தையில் அதிகளவு இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது சீன ஸ்மார்ட்போன்களே. இது குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை கொடுப்பதால், வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. இதற்கிடையில் இந்த இடத்தினை தக்க வைத்துக் கொள்ள 5ஜி தொழில் நுட்பம் பொருந்திய ஸ்மார்ட்போன்களை கவனம் செலுத்தி வருவது மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: realme ரியல்மி
English summary

Realme announced 831% growth in 5G Smartphone in Q3

Realme announced 831% growth in 5G Smartphone in Q3/831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..!
Story first published: Monday, January 3, 2022, 22:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X