இந்தியாவில் ரெசிஷன்.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் மாதத்திற்குப் பிறகு உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் ஏற்படும் என்று மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த ரெசிஷன் இந்திய மக்களைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே உறுதி அளித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே இந்த ஆண்டு அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளைப் பொருளாதார மந்தநிலைக்குள் அதாவது ரெசிஷனுக்குள் நுழையும் என IMF எச்சரித்த நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் இதற்காகத் தயாராகி வரும் வேளையில் அமைச்சர் நாராயண் ரானே-வும் இதை உறுதி செய்துள்ளார்.

Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள்.. ஜாக்பாட் கிடைக்குமா? Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள்.. ஜாக்பாட் கிடைக்குமா?

ரெசிஷன்

ரெசிஷன்

 

உலகளவில் ரெசிஷன் இருக்கும், இது பல நாடுகளைப் பாதிக்க உள்ளது எனவும், ஜூன் மாதத்திற்குப் பிறகு ரெசிஷன் இந்தியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அரசின் கூட்டங்களில் நடந்த விவாதத்தில் இருந்து நான் சேகரித்தது இதுதான் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

தற்போது, உலகில் பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது உண்மைதான். ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மக்கள்

இந்தியா மக்கள்

ரெசிஷன் பாதிப்பு இந்தியா மக்களைத் தாக்காமல் இருக்க மத்திய அரசும். பிரதமர் மோடியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MSME அமைச்சர் நாராயண் ரானே

MSME அமைச்சர் நாராயண் ரானே

மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் இரண்டு நாள் G20 உள்கட்டமைப்பு பணிக்குழு (IWG) கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது ANI-க்கு அளித்த பேட்டியில் உலகில் பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது உண்மைதான். ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை இந்தியாவுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

G20 IWG கூட்டம்

G20 IWG கூட்டம்

MSME துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரானே கூறினார். இரண்டு நாள் G20 IWG கூட்டத்தைத் தொடக்கிவைக்கும் போது புனேவில் இருக்கும் வளமான வர்த்தக வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.நீண்ட கால மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஜி20 கூட்டம் முக்கியமானது என்று ரானே வலியுறுத்தினார்.

G20 தலைமை பதவி

G20 தலைமை பதவி

இந்தியா தற்போது G20 தலைமை பதவியை டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை கொண்டு இக்கூட்டங்களை வழி நடத்துகிறது. IWG உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 65 பிரதிநிதிகள் இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் 2023 உள்கட்டமைப்பு நிகழ்ச்சி நிரலைப் பற்றி விவாதிக்கப் புனேவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்தியா

இந்தியா

கடந்த 8 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் வளர்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது என்று மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புனே கூட்டம்

புனே கூட்டம்

புனேவில் நடைபெறும் கூட்டத்தைப் பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம் மற்றும் இந்திய அரசு, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் இணைத் தலைவர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் கருப்பொருள் "Financing Cities of Tomorrow: Inclusive, Resilient, and Sustainable."

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Recession Might Hit India After June Says Union MSME Minister Narayan Rane

Recession Might Hit India After June Says Union MSME Minister Narayan Rane
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X