ஐடி நிறுவனத்தில் 'புதிய மாற்றம்'.. பழைய ஊழியர்களுக்குத் திடீர் அழைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தால் ஏற்கனவே நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களைச் சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்று வருகிறது. காரணமில்லாமல் பழைய ஊழியர்களை நிறுவனம் திரும்ப அழைக்காது.. அப்படியிருக்கையில் திரும்ப அழைக்க என்ன காரணம்..??

நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் சந்தை, வேலைவாய்ப்பு சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடி துறை மட்டும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காரணத்தால் எவ்விதமான வர்த்தகம் பாதிப்பு இல்லாமல் இத்துறை தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் புதிய வர்த்தகம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது வெளிநாடுகளில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் புதிய ஆர்டர்கள் இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் எதற்காக ஐடி நிறுவனங்கள் பழைய ஊழியர்களைத் திரும்ப அழைக்கிறது..? வாங்கப் பார்ப்போம்.

இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..!இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..!

Persistent Systems

Persistent Systems

புனே நகரத்தைச் சேர்ந்த Persistent Systems நிறுவனம் தனது சமுக வலைத்தளத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பழைய ஊழியர்கள் விருப்பம் இருந்தால் மீண்டும் நிறுவனத்தில் சேர அழைப்பு விடுத்துப் பதிவிட்டு இருந்தது. இதோடு நிறுவனத்தில் தற்போது 600 பணியிடங்கள் இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்


Persistent Systems நிறுவனத்தைத் தொடர்ந்து மையின்டுட்ரீ, பிர்லாசாப்ட், எல்டிஐ போன்ற பிற முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது பழைய ஊழியர்களை மீண்டும் நிறுவனத்தின் பணியில் அமர்த்த திட்டமிட்டு அதற்கான பணிகளைப் படுவேகமாகச் செய்து வருகின்றனர்.

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களும் இதைப் பணியை மறைமுகமாகச் செய்து வருகிறது. ஏன் இந்தத் திடீர் மாற்றம்..??

ஊழியர்கள் தேவை

ஊழியர்கள் தேவை

இந்தியாவில் கொரோனா காரணமாக டிசம்பர் வரையில் ஊழியர்கள் Work From Home அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், புதிய ஆர்டர்கள் அதிகளவில் கிடைக்கும் இந்தத் தருணத்தில் பணியாளர்கள் அதிகளவில் நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறது.

காரணம்

காரணம்

இதை இரண்டும் சமாளிக்க தற்போது இருக்கும் ஓரே வழி பழைய ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தான். ஆம் புதிய ஊழியரை பணியில் அமர்த்தினால் அனைத்தையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், நிறுவனம், டீம், நிறுவன கொள்கைகள், நடைமுறைகள் என அனைத்தும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள சில காலம் ஆகும், இதனால் காலதாமதம் அதிகமாக இருக்கும்.

இதுவே பழைய ஊழியர்களைப் பணியில் அமர்த்தினால் இந்தத் தாமதம் இருக்காது. நிறுவனத்தில் சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே 100 சதவீத திறனை ஊழியர்களிடம் இருந்து நிறுவனங்கள் பெற முடியும்.

10-15 சதவீத ஊழியர்கள்

10-15 சதவீத ஊழியர்கள்

தற்போது Mindtree நிறுவனத்தில் சேரும் பழைய ஊழியர்களை boomerang employees என அழைக்கிறது. அடுத்த சில மாதத்தில் boomerang employees-ன் எண்ணிக்கை மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10- 15 சதவீதமாக இருக்கும் என இந்நிறுவனத்தின் chief people officer பனீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்களின் இந்த முடிவு திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பப் பொறுப்பு ஆகிய காரணங்களுக்காகப் பணியில் இருந்து விலகிய பல கோடி இந்தியப் பெண்களுக்கு இது ஜாக்பாட்-ஆக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது பணியில் சேர்ந்தாலும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை என்பது மற்றொரு ஜாக்பாட்.

ஆகவே பெண்களை இந்த வாய்ப்பை கைவிடாதீர்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Redcarpet for former employees in Indian IT companies: Jackpot for women

Redcarpet for former employees in Indian IT companies: Jackpot for women
Story first published: Wednesday, August 19, 2020, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X