இனி இதிலும் மாற்றம்.. ஜனவரி 1 முதல் இதெல்லாம் விலை அதிகரிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வரவிருக்கும் புத்தாண்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அது நிதி ரீதியாகவும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய நடப்பு ஆண்டில், பலரும், பலவற்றையும் இழந்துள்ளனர் என்று தான் கூறவேண்டும்.

எப்படியே ஒரு வழியாக இந்தாண்டு இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இது கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட மாற்றமாக இருந்தாலும், மக்களுக்கு ஒரு நல்ல பாடமாகவும் உள்ளது.

இது மக்களுக்கு சில பொருளாதாரம் பற்றிய பாடங்களையும் புகட்டி விட்டுத் தான் சென்றுள்ளது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

இந்தியாவில் ஜனவரி 1 முதல் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அதனை பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் படித்தோம். அதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 1 முதல் டிவி, பிரிட்ஜி, வாஷிங்மெசின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் அப்ளையன்சன்ஸ் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மேற்கண்ட எலக்ட்ரானிக் அப்ளையன்சன்ஸ் பொருட்கள் தயாரிக்கும் மூலதன பொருட்களான காப்பர், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இது தவிர கடல் மற்றும் விமான சரக்கு கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதுவும் மூலதன பொருட்கள் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர பல செலவினங்களும் அதிகரித்துள்ளன.

எவ்வளவு அதிகரிக்கும்?

எவ்வளவு அதிகரிக்கும்?

ஆக மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, செலவுகள் அதிகரிப்பு என பல காரணங்களால் ஜனவரி 1 முதல், எல்இடி டிவி, வாஷிங்மெசின், பிரிட்ஜ் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் அப்ளையன்சன்ஸ் பொருட்களின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவி விலை அதிகரிக்கும்

டிவி விலை அதிகரிக்கும்

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக பிளாஸ்டிக் விலையும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே உலகளாவிய சப்ளையளர்களின் சப்ளை சரிவு காரணமாக, டிவி பேனல்களின் விலையும் இருமடங்கு அதிகரித்துள்ளன. இதனால் எல்ஜி, பானாசோனிக், தாம்சன் உள்ளிட்ட பிராண்டுகள், தங்களது பொருட்களின் விலையை ஜனவரி முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

முதல் காலாண்டில் எவ்வளவு விலையேற்றம்

முதல் காலாண்டில் எவ்வளவு விலையேற்றம்

எனினும் சோனி நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப விலையேற்றம் செய்யலாமா? வேண்டாமா? என ஆராய்ந்து வருவதாகவும் தெரிகிறது. ஆக மீடியம் டெர்மில் இந்த விலை அதிகரிப்புகள் நுகர்வோருக்கு பிரச்சனையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிபுணர்கள் இந்த பொருட்களின் விலையானது ஜனவரியில் 6 - 7% விலை அதிகரிக்கலாம் என்றும், இதே முதல் காலாண்டில் 10 - 11% அதிகரிக்கலாம் என்றும் பானசோனிக் இந்தியாவின் தலைவர் மனிஷ் சர்மா கூறியுள்ளார்.

பட்டியலில் எல்ஜியும் உண்டு

பட்டியலில் எல்ஜியும் உண்டு

நாட்டில் முன்னணி பிராண்டாக வலம் வந்து கொண்டுள்ள எல்ஜி, ஜனவரி 1 முதல் அதன் எலக்ட்ரானிக் பொருட்களின் விலையை 7 - 8% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜியின் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெசின் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த விலை அதிகரிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா எதிர்பார்ப்பு

இந்தியா எதிர்பார்ப்பு

இவற்றில் பல பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக இருந்தாலும், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான மூலதன பொருட்கள் இறக்குமதியானது, சீனாவிலிருந்து மற்றும் சில நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும் அதிகளவில் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lg sony
English summary

Refrigerator, Washing machine, TV and other electronic appliances price may go up around 10% from January

Electronics price updates.. Refrigerator, Washing machine, TV and other electronic appliances price may go up around 10% from January
Story first published: Monday, December 28, 2020, 13:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X