ஹிந்துஜா பிரசர்ஸ் உடன் முகேஷ் அம்பானி டீல்.. யாருக்கு லாபம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் ஹிந்துஜா பிரசர்ஸ் குடும்பத்தின் மத்தியிலான பல வருட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் 4 சகோதரர்களுக்கு இந்திய, பிரிட்டன், ஐரோப்பா, ஸ்விஸ் ஆகிய நாடுகளில் இருக்கும் சொத்துக்கள், வர்த்தகங்களைப் பிரிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஹிந்துஜா பிரதர்ஸ் தலைமையிலான ஹிந்துஜா குழுமம் கட்டுப்பாட்டில் இயங்கும் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய திட்டத்திற்காக இணைந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜகத் சேத்.. யார் இவர்? இவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜகத் சேத்.. யார் இவர்? இவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய வர்த்தகமாக இருக்கும் நியூ எனர்ஜி பிரிவின் தயாரிப்பை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வருவதற்காக முகேஷ் அம்பானி ஹிந்துஜா குழுமத்தின் டிரக் மற்றும் பஸ் தயாரிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் இன்ஜின்களை உருவாக்கவும், இதன் சப்ளை செயின் தளத்தை உருவாக்கவும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.

அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட்

இக்கூட்டணியில் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் தற்போது இருக்கும் 45000 டிரக்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வழங்கும் ஹைட்ரஜன் பியூயல் செல் இன்ஜின் மற்றும் இதை இயக்குவதற்கான சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், பிற மார்கெட்டி பொருட்களையும் பொருத்த உள்ளது.

ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை

ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் 2025 ஆம் ஆண்டு முதல் கிரீன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இத்துறை தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், பேருந்துகள் மற்றும் டாக்சிகள் உட்படப் பெரிய வாகனங்களுக்கு ஹைட்ரஜன் பியூயல் செல் இன்ஜின் வழங்குவது மட்டும் அல்லாமல் அதன் மூலம் ஹைட்ரஜன் வாயுவை விநியோகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.

ஹைட்ரஜன் பியூயல் செல்

ஹைட்ரஜன் பியூயல் செல்

இந்தத் திட்டம் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அசோக் லேலண்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், ஹைட்ரஜன் பியூயல் செல் இன்ஜின் சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

எலக்டிரிக் வாகனங்கள்

எலக்டிரிக் வாகனங்கள்

உலகளவில் எலக்டிரிக் வாகனங்கள் எப்படி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதைவிடப் பெரிய மாற்றத்தை ஹைட்ரஜன் பியூயல் செல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் செய்யும்.

டோயோட்டா

டோயோட்டா

இந்தப் பிரிவில் தற்போது டோயோட்டா முன்னோடியாக இருந்தாலும், விரைவில் டெஸ்லாவும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து தனக்கான சந்தை, உற்பத்தி, எரிபொருள் ஆகியவற்றைச் சொந்தமாக உருவாக்க உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தை

இந்திய ஆட்டோமொபைல் சந்தை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அசோக் லேலண்ட் இணைந்து வெற்றிகரமாக இந்த இன்ஜின்-ஐ தயாரித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் புதிய அத்தியாயம் துவங்கும். மின்சார உற்பத்தியை காட்டிலும் ஹைட்ரஜன் உற்பத்தி செலவுகள் மிகவும் குறைவு.

நிதின் சேத்

நிதின் சேத்

ஒரு வருடத்திற்கு முன்பு, அசோக் லேலண்டின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியான நிதின் சேத், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் -ன் new mobility பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

ஸ்விட்ச் மொபிலிட்டி

ஸ்விட்ச் மொபிலிட்டி

நாட்டின் இரண்டாவது பெரிய டிரக் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்டின் கிளை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி என்ற மின்சார வாகனப் பிரிவை உருவாக்குவதில் நிதின் சேத் முக்கியப் பங்கு வகித்தவர். வாகனத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance, Ashok Leyland to develop hydrogen fuel cell engines; Talks will finalize Soon

Reliance, Ashok Leyland to develop hydrogen fuel cell engines; Talks will finalize Soon
Story first published: Thursday, December 8, 2022, 16:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X