பாவம் வங்கிகள்! கிஷோர் பியானி கம்பெனிக்கு கொடுத்த கடனை முழுமையாக வசூலிக்க முடியாது போலருக்கே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது வங்கிகளுக்கு மோசமான காலம். ஏற்கனவே, வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதோடு 6 மாத இ எம் ஐ கடன் தவணைகளைத் ஒத்திப் போடவும் ஆர்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே பொருளாதார மந்த நிலை & அழுத்தத்தினால் வியாபாரம் சரியாக செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பல கம்பெனிகள், கொரோனா தாக்கத்தினால் மொத்தமாக படுத்தேவிட்டது. வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கிஷோர் பியானி

கிஷோர் பியானி

அப்படிப்பட்ட கம்பெனிகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் ரீடெயில் கம்பெனிகள். கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் ரீடெயில் கம்பெனி கடந்த பல மாதங்களாக கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். 6 ஃப்யூச்சர் குழும கம்பெனிகளின் கடன்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் சுமாராக 12,989 கோடி ரூபாய் கடன் பாக்கி இருக்கிறதாம்.

விற்று விடு

விற்று விடு

கிஷோர் பியானியின் ரீடெயில் கம்பெனிகள் சரியாக வியாபாரம் செய்து கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கம்பெனியை விற்று, கடனை அடைக்கச் சொன்னார்கள் கடன் கொடுத்த வங்கிகள். இப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி, கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் கம்பெனிகளை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

30 % கடன் கழிப்பு

30 % கடன் கழிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி, கடனால் அவதிப்படும் கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழும கம்பெனியை வாங்க தயாராக இருந்தாலும், வங்கிகளுக்கு ஃப்யூச்சர் குழும கம்பெனி கொடுக்க வேண்டிய கடனில், சுமாராக 30 சதவிகித கடன்களைக் கழித்துக் கொள்ளச் சொல்லி ரிலையன்ஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம்.

உறுதி செய்யவில்லை

உறுதி செய்யவில்லை

இப்படி வங்கிகள் கொடுத்த கடனை 30 % கழித்துச் சொல்லச் சொல்வது உண்மை தானா? என விசாரித்தால், உண்மை தான் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்த 30 சதவிகித கடன் கழிப்பை இன்னும் உறுதி செய்யவில்லை எனவும் சொல்கிறார்கள் வங்கி தரப்பினர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance ask future group lenders to take 30% haircut

The reliance industries asked the future group lenders to take 30 percent loan haircut to complete the deal. Still discussion is going on. Deal not finalized.
Story first published: Tuesday, July 14, 2020, 14:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X