மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.. முகேஷ் அம்பானியின் தீரா பிரிட்டிஷ் மோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியின் முதல் இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் நிலையில் வாரிசுகளைக் களமிறக்கியதில் இருந்து புதிய வர்த்தகத்திற்குள் நுழைவது வரையில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இதேவேளையில் பிரிட்டன் மீது முகேஷ் அம்பானிக்குத் தீரா காதல் உள்ளது என அனைவருக்கும் தெரியும், லண்டனுக்கு அருகில் ஆரம்ப வீட்டை வாங்கிய நாளில் இருந்து அந்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் துடியாய் துடித்து வருகிறார்.

இதற்காகவே சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் பிரபலமாக விளங்கும் Boots பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் முன்னணி உணவு நிறுவனத்துடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்! தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி இந்தியாவில் பல வர்த்தகத் துறைக்குள் நுழைந்து வர்த்தகம் செய்து வரும் நிலையில் தற்போது புதிதாக நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் food and beverage துறைக்குள் நுழைந்துள்ளார்.

சப்வே முயற்சி தோல்வி

சப்வே முயற்சி தோல்வி

இத்துறைக்குள் நுழைய வேண்டும் என்பதற்காகச் சப்வே இந்திய வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் இந்த முயற்சி பாதியிலேயே நின்றது, இந்தியாவில் மெக்-டி, கேஎப்சி, பிட்சா ஹட் ஆகியவற்றின் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்த வரும் நிலையில் சப்வே மட்டும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாமல் உள்ளது.

Pret A Manger நிறுவனம்

Pret A Manger நிறுவனம்

இந்தச் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரிட்டன் நாட்டில் மிகவும் பிரபலமான சான்விட்ச் மற்றும் காஃபி செயின் கடைகளில் ஒன்றான Pret A Manger நிறுவனத்தின் இந்திய பிரான்சைஸ் வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது.

மும்பையில் முதல் கடை

மும்பையில் முதல் கடை

Pret A Manger இந்திய பிரான்சைஸ் வர்த்தகத்தை ரிலையன்ஸ் பிரான்ட்ஸ் லிமிடெட் கைப்பற்றிய நிலையில் விரைவில் நாட்டின் முக்கிய நகரங்களில் கடைகளைத் திறக்க உள்ளது. இதில் முதல் கடை மும்பையில் மார்ச் 2023க்குள் துவங்கப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் கூட்டணி மட்டுமே

ரிலையன்ஸ் கூட்டணி மட்டுமே

Pret A Manger நிறுவனம் முதலீட்டு குழுவான JAB மற்றும் அதன் நிறுவனர் Sinclair Beecham கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானி தற்போது Pret A Manger வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது, பங்குகளையோ, வர்த்தகத்தையோ வாங்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Brands franchise partnership with Pret A Manger to Launch British Sandwich & Coffee Chain in India

Reliance Brands franchise partnership with Pret A Manger to Launch British Sandwich & Coffee Chain in India மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.. முகேஷ் அம்பானியின் தீரா பிரிட்டிஷ் மோகம்..!
Story first published: Friday, July 1, 2022, 16:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X