மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.. அம்பானி-யின் அடுத்த புதிய பிஸ்னஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் டிஜிட்டல் சேவை துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தேட துவங்கியுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களின் சேவைகளுக்கு மாற்று சேவையைச் சொந்தமாகச் சேவையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் சீனா செலியான டிக்டாக்-ஐ தடை செய்யப்பட்ட பின்பு பல நிறுவனங்கள் இந்த வெற்றிடத்தை அடைய போராடி வந்தாலும் டிக்டாக் உருவாக்கிய தாக்கத்தை யாராலும் உருவாக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோவில் இவ்வளவு திட்டங்கள் உள்ளனவா? எது பெஸ்ட்..! ரிலையன்ஸ் ஜியோவில் இவ்வளவு திட்டங்கள் உள்ளனவா? எது பெஸ்ட்..!

ஜியோ பிளாட்பார்ம்ஸ்

ஜியோ பிளாட்பார்ம்ஸ்

ஜியோ பிளாட்பார்ம்ஸ் சில மாதங்களுக்கு முன்பு மியூசிக் & பாப் காலச்சாரப் பத்திரிக்கையான Rolling Stone India மற்றும் விளம்பர ஏஜென்சியான Creativeland Asia ஆகியோர் உடன் இணைந்து இந்தியாவில் ஷார்ட் வீடியோ பிரிவில் புதிய சேவையைத் துவங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.

ஷாட் வீடியோ Platfom

ஷாட் வீடியோ Platfom

ஜியோ பிளாட்பார்ஸ் தனது புதிய ஷாட் வீடியோ தளத்திற்கு Platfom எனப் பெயரிட்டு உள்ளது, டிக்டாக் உருவாக்கிய இடைவெளியை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவை முயற்சி செய்து வரும் நிலையில் இந்தப் போட்டியில் ரிலையன்ஸ் ஜியோ-வும் இறங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி
 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்த Platfom செயலியை ஜனவரி 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. டிக்டாக் போலவே Platfom செயலியும் பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அனைவரையும் தனது தளத்தில் இணைப்பதற்காக ஒப்பந்தம் செய்ய உள்ளது.

வெற்றி அடையுமா..?

வெற்றி அடையுமா..?

ஆனால் உண்மையில் இப்பிரிவில் வெற்றி அடைய முடியுமா..? இதைத் தெரிந்துகொள்ள முதலில் ஜியோ இதற்கு முன்பு அறிமுகம் செய்த டிஜிட்டல் தளங்களின் தரம், நிலைமை, வாடிக்கையாளர் அனுபவத்தைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

ஜியோ மீட்

ஜியோ மீட்

கொரோனா காலத்தில் அதிகப்படியானோரால் பயன்படுத்தப்பட்ட ஒரு சேவை என்றால் வீடியோ கான்பிரான்ஸ் சேவை தான், இந்தத் துறையில் ஜூம் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய நிலையில் ரிலையன்ஸ்-ம் JioMeet என்ற வீடியோ கான்பிரன்ஸ் சேவையை அறிமுகம் செய்தது. இதைப் பயன்படுத்திய பலரும் ஜூம் செயலியின் காப்பி என்றும்,பல்வேறு கோளாறு நிறைந்துள்ளது என விமர்சனம் செய்தனர். இதனால் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்கப்படவில்லை.

ஜியோமார்ட்

ஜியோமார்ட்

2019ல் ஜியோமார்ட் அறிமுகம் செய்யப்பட்டு லாக்டவுன் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சில காலத்திலேயே சேவை தரம் குறைந்து மளிகை பொருட்கள் விற்பனை அனுபவத்தை மொத்தமாக மாற்றப்போகும் ஜியோமார்ட் என்ற அடையாளத்துடன் வந்தது, ஆனால் இப்பிரிவில் தற்போது மிகவும் சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே கொண்டு உள்ளது.

ஜியோசினிமா

ஜியோசினிமா

OTT தளங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கு டிஜிட்டல் வடிவமாக வந்த ஜியோசினிமா FIFA World Cup 2022 போட்டியின் போது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் போட்டியின் முதல் நாளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இன்று வரையில் ஜியோசினிமா தளத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

முதலீடுகள்

முதலீடுகள்

ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருந்து டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாற வேண்டும் என்றால் கட்டாயம் பல அனுபவம் உதவிகளும் வேண்டும். இதற்காக ஜியோ 2018ல் இருந்து பல டெக் மற்றும் டிஜிட்டல் சேவை தளத்தில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்த முதலீட்டு நிறுவனங்களில் சில ஜியோ சாவன், Embieb, Dunzo, Addverb, Haptik, netmeds என அடுக்கிக்கொண்ட போகலாம்.

 அடிப்படை

அடிப்படை

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் சில மோசமான நிலையில் தோல்வி அடைந்தாலும்,பல வளர்ச்சி பாதையில் தான் உள்ளது. அனைத்திற்கும் மேலாக ரிலையன்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை பிரம்மாண்டமாக உள்ளது. இதனால் சில தோல்விகள் ஜியோவை ஒன்றும் செய்ய முடியாத. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ வின் புதிய ஷாட் வீடியோ சேவை தளமான Platfom-ன் வெற்றி இத்தளத்தில் யூசர் எக்ஸ்பீரியன்ஸ், robust recommendation system, இளம் தலைமுறையினரை ஈர்க்கும் அடிப்படை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Empire's new Platfom A Short video App to fill void left by TikTok; does Really Works?

Reliance Empire's new Platfom A Short video App to fill void left by TikTok; does Really Works?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X