முகேஷ் அம்பானி பெரிய மனசுக்காரர்.. ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு நீதா அம்பானி சொன்ன குட் நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பெரும் அளவிலான அலைக்கற்றையைக் கைப்பற்றி டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதன் எதிரொலியாகக் கடந்த 2 நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது.

 

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பைச் சரியான நேரத்தில் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ்-க்கான தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சில நாட்களுக்கான முன்பாக மத்திய அரசு 45 வயதுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்து. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

500 ரூபாய் செலவு

500 ரூபாய் செலவு

கொரோனா தடுப்பூசியை 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸ்-க்கு 250 ரூபாய் வீதம் 2 முறை தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீதா அம்பானி சூப்பர் அறிவிப்பு
 

நீதா அம்பானி சூப்பர் அறிவிப்பு

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 2 லட்சம் ஊழியர்களுக்கும் அவர்களது மனைவி/கணவன், பெற்றோர் மற்றும் அரசு அறிவித்துள்ள வயது வரம்புக்கு உட்படப் பிள்ளைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை முழுமையாக ரிலையன்ஸ் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன்ஸ் தலைவர் நீதா அம்பானி ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊழியர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊழியர்கள்

இதுமட்டும் அல்லாமல் நீதா அம்பானி அனைத்து ஊழியர்களும் உடனடியாகக் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற அரசின் கோவிட் 19 வேக்சின் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போலவே டிசிஎஸ், இன்போசிஸ், அக்சென்சர், ஆர்பிஜி குரூப், பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பம் உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries employees, immediate family members get cover for Covid19 vaccine: Nita Ambani

Reliance Industries employees and immediate family members get cover for Covid-19 vaccine: Nita Ambani
Story first published: Friday, March 5, 2021, 12:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X