முகேஷ் அம்பானி திடீர் முடிவு.. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி தனது வர்த்தகக் குழுமத்தில் இருக்கும் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கு நேரடியாகக் கடன் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இந்த முக்கியமான திட்டத்திற்காக Reliance Strategic Investments (RSIL) என்ற கிளை நிறுவனத்தை Jio Financial Services Limited (JFSL) எனப் பெயர் மாற்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து தனி நிறுவனமாகப் பிரிந்து ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.

இதேவேளையில் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கட்டுமானம் மற்றும் திட்டங்களை நிறுவும் பணிகளை வேகமப்படுத்த தனித்தனியாக இருக்கும் பல்வேறு சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை ஓரே நிறுவனத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. இனி பணம் விளையாடும்..! முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. இனி பணம் விளையாடும்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாடா குழுமத்தை போலவே சந்தையில் உருவாகியிருக்கும் வர்த்தக மாற்றங்கள், தேவைகள், போட்டி ஆகியவற்றின் அடிப்படையிலும் பல்வேறு நிர்வாக மாற்றங்களையும், நிறுவன சீர்திருத்த பணிகளையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்து வருகிறது. இந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது EPC மற்றும் இன்பராஸ்டக்சர் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்துள்ளது.

EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு

EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது EPC மற்றும் இன்பராஸ்டக்சர் வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் கிளை நிறுவனமான Reliance Projects and Property Management Services (RPPMSL) பிரிவின் கீழ் ரிலையன்ஸ் கிளை நிறுவனங்களில் இருக்கும் EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு ஊழியர்கள் சேர்ந்து தனி நிறுவனமாக உருவெடுக்க உள்ளது.

24000 ஊழியர்கள்

24000 ஊழியர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் 4000 EPC மற்றும் இன்பராஸ்டக்சர் ஊழியர்கள் இருக்கும் நிலையில், RPPMSL நிறுவனத்தின் 20000த்திற்கும் அதிகமாக ஊழியர்கள் உள்ளனர். தற்போது EPC மற்றும் இன்பராஸ்டக்சர் வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையில் 24000 ஊழியர்கள் கொண்டு உள்ளது ரிலையன்ஸ் திட்டங்கள் மற்றும் சொத்து மேலாண்மை சேவை நிறுவனம்.

O2C, நியூ எனர்ஜி, 5ஜி

O2C, நியூ எனர்ஜி, 5ஜி

EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு O2C, நியூ எனர்ஜி மற்றும் 5ஜி சேவை அறிமுகத்தில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பிரிவில் அமைக்கப்படும் மெகா திட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்படும் முக்கியமான கட்டமைப்புகள் அனைத்திற்கும் ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரூ.43,071 கோடி விற்றுமுதல்

ரூ.43,071 கோடி விற்றுமுதல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் 31, 2022 வரையிலான நிதியாண்டில் மொத்த 4,45,375 கோடி ரூபாய் விற்றுமுதலில் EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு மட்டும் சுமார் 43,071 கோடி ரூபாயை கொண்டு உள்ளது. இந்த வர்த்தகப் பிரிவுக்குப் பின்பு EPC மற்றும் இன்பராஸ்டக்சர் பிரிவு அமெரிக்கா, துபாயில் புதிய வர்த்தகத் தளத்தை அமைக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries implement mega projects fast; Major restructure in EPC resources

Reliance Industries implement mega projects fast; Major restructure in EPC resources
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X