ஜியோவின் இந்த சரவெடி சலுகை இன்னும் ஒரு மாத காலத்திற்கு உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் எந்தவொரு சலுகையை அறிவித்தாலும், அது அதிரடியான சரவெடி சலுகையாய் தான் இருக்கும். இந்த நிலையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு அதிரடியான சலுகையை அறிவித்தது ஜியோ.

 

ஜியோ என்றாலே சலுகைக்கு பேர் போன நிலையில், ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகை விலையில் ஜியோ போனை விற்பனை செய்வதாக அறிவித்தது.

ஜியோவின் இந்த சரவெடி சலுகை இன்னும் ஒரு மாத காலத்திற்கு உண்டு..!

இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு தீபாவளி 2019 என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதன் படி 1,500 ரூபாய் மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன்படி இந்த சலுகை மூலம் போனினை வாங்குபவர் 800 ரூபாய் சேமிக்க முடிகிறது. இந்த அதிரடியான சலுகையை பெற்றுக் கொள்ள எந்த ஒரு நிபந்தனையோ அல்லது விதிமுறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய போன்களை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது எனவும் கூறப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவெனில் இந்த குறைந்த விலையுள்ள போன், சந்தையில் உள்ள 2ஜி அம்ச செல்போன்களை விட மிகக் குறைவு தான். அதிலும் 2ஜி போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 4ஜி அம்சம் நிறைந்த செல்போன் சேவையை பயன்படுத்துவதில் இருந்த தடை, இதன் மூலம் நீக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதன் மூலம் தீபாவளி 2019 சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும், இதனோடு முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக 99 ரூபாய் மதிப்புள்ள டேட்டா பலன்களும் இலவசமாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2,000 எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதி, டார்ச் லைட், ஹெட்போன் ஜாக், எஃப்.எம் ரேடியோ, மைக்ரோபோன் அன்ட் ஸ்பீக்கர், எஸ்.டி கார்டு சப்போர்ட் 128ஜிபி வரை உள்ளது.

 

இந்த நிலையில் இந்த சலுகை நவம்பர் 30 வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இந்த மாதம் இறுதி வரையில் இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio announced JioPhone Diwali Offer extended by till November 30

Reliance jio announced JioPhone Diwali Offer extended by till November 30. This offer will now be valid for the November month end.
Story first published: Sunday, November 3, 2019, 14:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X