சர்வதேச நிறுவனங்களை அலறவிட்ட ரிலையன்ஸ்.. வெறும் 13,299 ரூபாயில் 'லேப்டாப்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட்போனுக்கு அடுத்து மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் ஒன்றாக இருக்கும் லேப்டாப் வர்த்தகத்தில் இதுவரையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த நிலையில் முதல் முறையாக இந்திய நிறுவனம் அதுவும் பட்ஜெட் விலையில் லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்தையில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் எனப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையத் தளத்தில் புதிய ஜியோபுக் லேப்டாப்-ஐ வெறும் 15,799 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

சுதந்திர தின சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.31,600 தள்ளுபடி.. அமேசான் அதிரடி!சுதந்திர தின சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.31,600 தள்ளுபடி.. அமேசான் அதிரடி!

லேப்டாப் விற்பனை

லேப்டாப் விற்பனை

இந்திய லேப்டாப் விற்பனை சந்தையில் பல ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில் சமீபத்தில் சீன நிறுவனங்கள் நுழைந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்திய நிறுவனமும் களத்தில் இறங்கி பட்ஜெட் வாடிக்கையாளர் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய ஜியோபுக் லேப்டாப்-ஐ மாணவர்கள், கல்வியாளர்களைக் குறிவைத்துக் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தின் மூலம் நேரடி விற்பனையில் இறங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் - JioOS

மைக்ரோசாப்ட் - JioOS

எப்படி ஜியோ போனுக்காகக் கூகுள் உடன் இணைந்து இந்தியாவுக்கான தனிப்பட்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் உருவாக்கியதோ, அதேபோல் ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப்-க்காக மைக்ரோசாப்ட் உடன் இணைந்து JioOS என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது.

ஜியோபுக் லேப்டாப்

ஜியோபுக் லேப்டாப்

ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையத் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ச புதிய ஜியோபுக் லேப்டாப்-ல் 11.6 இன்ச் டிஸ்பிளே, 2MP கேமரா, 2ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், 2 usb போர்டு, Qualcomm Snapdragon 665 chip, 5000mAh பேட்டரி உடன் இயங்குகிறது. அனைத்தையும் விட முக்கியமான இந்த லேப்டாப் 4G LTE கனெட்டிவிட்டி கொண்டு உள்ளது.

தள்ளுபடி

தள்ளுபடி

15,799 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப்-ஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்தால் 1500 ரூபாய் தள்ளுபடியும், இதே பேமெண்ட் முறையில் ஈஎம்ஐ ஆப்ஷன் தேர்வு செய்தால் 2500 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ஒருவர் வெறும் 13,299 ரூபாய்க்கு ஒரு ஜியோபுக் லேப்டாப்-ஐ வாங்க முடியும்.

தரம் மற்றும் பயன்பாடு

தரம் மற்றும் பயன்பாடு

ஜியோபுக் லேப்டாப் தரம் மற்றும் பயன்பாடு சிறப்பாக இருந்தால் கட்டாயம் பெரும் தாக்கத்தை இந்திய லேப்டாப் சந்தையில் ஏற்படுத்தும். இந்த லேப்டாப்-ல் இன்டெல் பிராசர் இல்லாதது ஒரு குறையாகப் பார்க்கப்பட்டாலும் Qualcomm Snapdragon 665 chip இதை ஈடு செய்துவிட்டால் சக்சஸ் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio first JioBook laptop launched at RS.15,799 with JioOS; how to avail upto 2500 discount

Reliance Jio first JioBook laptop launched at RS.15,799 with Microsoft partnered JioOS and Qualcomm Snapdragon 665 chip; how to avail upto 2500 discount
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X