முகேஷ் அம்பானி வழிநடத்திக் கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, இன்று இந்தியாவிலேயே மிக அதிக வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கொண்ட கம்பெனியாக வளர்ந்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் சந்தையில் எவ்வளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது? எவ்வளவு சதவிகித சந்தையை தன் கைவசம் வைத்திருக்கிறது? மற்ற கம்பெனிகளின் நிலை என்ன என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
முதலில், வொயெர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் இருந்து தொடங்குவோம்.
Wireless Subscriber Base ஜூன் 2020 நிலவரம்
கடந்த மே 2020-ல் 1143.90 மில்லியனாக (114.39 கோடி) இருந்த வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை, இந்த ஜூன் 2020-ல் 1140.70 மில்லியனாக (114.07 கோடி) சரிந்து இருக்கிறது. அதாவது 31.99 லட்சம் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சரிந்து இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோவுக்கு இந்த கணக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து இருக்கிறது.
ஜுன் 2020
கடந்த மே 2020-ல் 39,27,49,930 ஆக இருந்த வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை, இந்த ஜூன் 2020-ல் 39,72,49,404 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் 44,99,474 வாடிக்கையாளர்களை காந்தம் போல இழுத்து இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. ஒட்டு மொத்தமாக, இந்தியாவின் வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களில் 34.82 சதவிகித சந்தையை தன் கையில் வைத்திருக்கிறது ஜியோ.
ஏர்டெல் நிலை என்ன
கடந்த மே 2020-ல் 31,78,00,259 ஆக இருந்த வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை, இந்த ஜூன் 2020-ல் 31,66,71,484 ஆக சரிந்து இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் 11,28,775 வாடிக்கையாளர்களை தவறவிட்டு இருக்கிறது பார்தி ஏர்டெல். ஒட்டு மொத்தமாக, இந்தியாவின் வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களில் 27.76 சதவிகிதம் சந்தையை தன் கையில் வைத்திருக்கிறது பார்தி ஏர்டெல்.
வொடாபோன் ஐடியாவின் பரிதாப நிலை
கடந்த மே 2020-ல் 30,99,25,391 ஆக இருந்த வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை, இந்த ஜூன் 2020-ல் 30,51,03,876 ஆக சரிந்து இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் 48,21,515 வாடிக்கையாளர்களை தவறவிட்டு இருக்கிறது வொடாபோன் ஐடியா. ஒட்டு மொத்தமாக, இந்தியாவின் வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களில் 26.75 சதவிகிதம் சந்தையை மட்டுமே தக்க வைத்து இருக்கிறது விஐ.
மற்ற நெட்வொர்க்குகளின் வொயர்லெஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை
ஜூன் 2020 மாதத்தில் மத்திய அரசின் பி எஸ் என் எல் கம்பெனி 11,82,16,804 + 92,161 வாடிக்கையாளர்களையும், எம் டி என் எல் 33,54,720 வாடிக்கையாளர்களையும்,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 17,387 வாடிக்கையாளர்களையும் வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த சந்தையில் பி எஸ் என் எல் 10.37 %, எம் டி என் எல் 0.29 %, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 0.002 % சந்தையையும் வைத்திருக்கிறார்கள்.
பிராட்பேண்டிலும் ஜியோ தான்
இந்தியாவில் மொத்தம் 698.23 மில்லியன் பிராட்பேண்ட் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். அதில் 398.31 மில்லியன் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறது டிராய் தரவுகள். இது இந்தியாவின் ஒட்டு மொத்த பிராட்பேண்ட் சப்ஸ்கிரைபர்களில் 57.05 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த பால் போட்டாலும் சிக்ஸ் தான்
இந்தியாவின் டெலிகாம் துறையில் வொயர் லைன்களை 19.81 மில்லியன் பேர் (1.98 கோடி) தான் பயன்படுத்துகிறார்கள். வொயர்லெஸ் போன்களைத் தான் 1140.71 மில்லியன் (114.07 கோடி) பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ஜியோ 34.82 % சந்தையை வைத்திருக்கிறது. பிராட்பேண்டை 69.82 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அதிலும் 57.05 % சந்தையை வைத்திருக்கிறது ஜியோ. எந்த பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications