ஏர்டெல் வோடபோனை விடாமல் துரத்தும் ஜியோ.. மீண்டும் ஆரம்பித்துள்ள சரவெடி சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத் தொடர்பு துறையில் நீடித்து வரும் பிரச்சனையை போக்க, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் தான் கட்டண உயர்வை செய்துள்ளன. ஒரு புறம் மற்றொரு நிறுவனத்தை விட தாங்கள் தான் சிறந்தவர் என நிருபிக்கும் விதமாக, கட்டணத்தை உயர்த்திய அதே நேரத்தில் சில பல சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.

இதற்கு முன்பு இலவச கால்களை வழங்கி வந்த ஜியோ, தற்போது ஐயூசி கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக ஏர்டெல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.

இப்படி ஒரு அடியை எதிர்பாராத ஜியோ, தற்போது இதை சரிகட்டும் விதமாக மீண்டும் தனது 98 ரூபாய் மற்றும் 149 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

அமலுக்கு வந்த பழைய திட்டம்
 

அமலுக்கு வந்த பழைய திட்டம்

இந்த திட்டங்களானது ரிலையன்ஸ் ஜியோ ஆல் இன் ஒன் பிளான் என்ற திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்த பின் அமலுக்கு கொண்டு வந்த பின்னர், ஜியோ இனி இந்த குறைந்தபட்ச திட்டங்கள் அமலில் இல்லை என அறிவித்தது. எனினும் ஏர்டெல்லின் அதிரடி சலுகைக்கு பின்னர் தற்போது ஜியோ இந்த திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

98 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

98 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

ஜியோவின் 98 ரூபாய் பிளானில் 2ஜிபி டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. இதில் ஜியோ - ஜியோ இலவச கால் சேவை கட்டணங்களுடன் வழங்கப்படுகிறது. இதே மற்ற நெட்வொர்க்குகளுக்கு ஐயூசி கட்டணத்தையும் செலுத்திக் கொள்ளலாம். இதில் 300 இலவச எஸ்.எம்.எஸ்களையும் பெற்றுக் கொள்ளலாம். இதில் அதிகம் பேசுபவர்களுக்கும், டேட்டா அதிகம் தேவையில்லை என்பவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

149 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

149 ரூபாய் திட்டத்தில் என்ன சலுகை?

இதே 149 ரூபாய் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் ஜியோ ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச கால்களும், இதே ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு 300 நிமிடங்கள் இலவசம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த அதிரடி திட்டமானது 24 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.

லிமிடெட் இலவச சேவை
 

லிமிடெட் இலவச சேவை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்டு பிளானில் ஜியோ -ஜியோ இலவச சேவையை வழங்கினாலும், ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கு குறிப்பிட்ட அளவு கால்களையே இலவசமாக கொடுத்துள்ளது. ஆனால் ஏர்டெல் நிறுவனமே முற்றிலும் இலவச சேவையை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு 28 நாட்கள் திட்டத்தில் 1000 நிமிடங்கள் இலவசம் என்றும், இதே 84 நாட்கள் திட்டத்தில் 3000 நிமிடங்களும், இதே 365 நாட்கள் திட்டத்தில் 12,000 நிமிடங்கள் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் கட்டண விகிதம்

ஏர்டெல் கட்டண விகிதம்

ஆனால் ஏர்டெல்லில் இதை விட கட்டணம் சற்று கூடுதல் எனினும், அனைத்தும் இலவச சேவை என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் ஜியோவில் டேட்டா உபயோகம் என்பது மிக அதிகம் என்றும் கருதப்படுகிறது. அதிலும் மற்ற நெட்வொர்க்குகளுடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதோடு மற்ற நெட்வொர்க் திட்டங்களுடன் ஒப்பிடும்போது ஜியோவின் திட்டங்கள் 25 சதவிகிதம் அதிகம் மதிப்பை வழங்குகிறது என்றும் ஜியோவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio launched Rs.98, 149 prepaid plans, check here benefits

Reliance jio relaunched Rs.98, 149 prepaid plans, Rs.98 plan get 2 GB data, and jio - jio unlimited call, and other network users want to pay IUC charges. Rs.149 Plans get daily 1 GB data, and jio - jio free calls, other network calls first 300 minutes free and validity for 24 days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X