ரிலையன்ஸ் ஜியோ என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த செப்டம்பர் 2016 முதல் இந்தியாவையே கலக்கி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இப்போது, ரிலையன்ஸ் ஜியோ, அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான, மைக்ரோசாஃப்ட் என்கிற மற்றும் ஒரு பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவையே இன்னொரு கலக்கு கலக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுறவு ஒப்பந்தம், இந்த தசாப்தத்தையே நிர்ணயிக்க இருக்கும் ஒரு முக்கியமான ஒப்பந்தம். இந்த கூட்டுறவு ஒப்பந்தத்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன் எனச் சொல்லி இருக்கிறார் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

கடந்த ஆண்டிலேயே, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தப் படி இந்தியாவில், அசூர் க்ளவுட் சேவைகளை, ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்க வேண்டும்.
ஜியோ நிறுவனமோ சிறு வியாபாரம் தொடங்கி, எண்டர்பிரைசஸ் வரை எல்லாவற்றையும் குறி வைத்து, அனைவரையும் க்ளவுட் டெக்னாலஜி சேவைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
ஜியோ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட் அப் தொடங்கி சிறு குறு தொழில்கள், வர்த்தகர்கள், கடை நடத்துபவர்கள் என பல தரப்பினர்களோடும் வேலை பார்க்க இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்தியாவை டெக்னிக்கலாக முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாத்தியமா? முகேஷ் அம்பானின்னா சும்மாவா..?
இந்தியாவில் சிறு குறு தொழில்கள் தான், 70 சதவிகித இந்தியர்களின் வேலை வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் 40 சதவிகித ஏற்றுமதியும் இவர்களைச் சார்ந்து தான் இருக்கிறது. இவர்கள் டெக்னாலஜியின் துணை இல்லாமலேயே இந்த அளவுக்குச் செய்து இருக்கிறார்கள் என பெருமையாக பேசி இருக்கிறார்.
கடைசியாக, இந்தியா நிறைய மாறிவிட்டது. அடுத்த தலைமுறையினர், நாம் (சத்ய நாதெல்லா மற்றும் முகேஷ் அம்பானி) வளர்ந்த இந்தியாவை விட, ஒரு வேறு பட்ட புதிய இந்தியாவைப் பார்ப்பார்கள் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. ஆக முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம் க்ளவுட் சேவை வழங்குவதிலும் இருப்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.