5 மாதம் எல்லாம் இலவசம்.. டேட்டா+ காலிங்.. ஜியோவின் அதிரடி சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனமானது ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே, தனிகாட்டு ராஜவாக வலம் வந்து கொண்டு உள்ளது.

தன் சலுகையினாலேயேயும் இலவச ஆஃபர்களினாலேயே மற்ற நிறுவனங்களை பின்னடவை சந்தித்தன.

தற்போது அதனை போலவே இலவசமாக 5 மாத டேட்டா மற்றும் காலிங் சேவையை வழங்கி வருகின்றது. உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விஷயமே.

ஜியோஃபை இலவச டேட்டா மற்றும் கால்
 

ஜியோஃபை இலவச டேட்டா மற்றும் கால்

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் ஜியோ, சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக பல அதிரடியான திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை வாங்குவதன் மூலம், ஐந்து மாதங்கள் வரை இலவச தரவு மற்றும் ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது.

ஜியோஃபை விலை

ஜியோஃபை விலை

இந்த ஜியோஃபை விலை 1,999 ரூபாய் இந்த சலுகையைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் முதலில் JioFi க்காக இருக்கும் திட்டங்களில் ஒன்றை வாங்க வேண்டும். ஜியோஃபை ஹாட்ஸ்பாட் (JioFi hotspot) ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிலிருந்து (Reliance Digital) வாங்கிய பின்னர், அதில் ஜியோ சிம் செயல்படுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மூன்று ஜியோஃபை திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அந்த திட்டம் அடுத்த ஒரு மணி நேரத்தில் செயல்படுத்தப்படும்.

முதல் சலுகை

முதல் சலுகை

அதுமட்டும் அல்ல மற்றொரு மூன்று திட்டங்களையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவதாக 199 ரூபாய் திட்டமாகும். இது தினசரி 1.5 ஜிபி தரவை அளிக்கிறது, இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். நீங்கள் ஜியோ பிரைம் உறுப்பினர் பெற கூடுதலாக 99 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற மொபைல் நெட்வொர்க் 1000 நிமிடங்கள் கிடைக்கும். மற்றும் 140 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கும்

இரண்டாவது சலுகை
 

இரண்டாவது சலுகை

இரண்டாவது சலுகை 249 ரூபாயாகும். இது 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி தரவை வழங்குகிறது. இங்கேயும் ஜியோ பிரைம் உறுப்பினர் பெற கூடுதலாக 99 ரூபாயினை செலுத்த வேண்டும். ஜியோ-டு-ஜியோ வரம்பற்ற அழைப்பு மற்றும் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்கில் அழைக்க 1000 நிமிடங்கள் 28 நாட்களுக்கு கிடைக்கும் ஒரு நாளைக்கு 100 தேசிய எஸ்எம்எஸ் 112 நாட்களுக்கு கிடைக்கும்.

மூன்றாவது சலுகை

மூன்றாவது சலுகை

மூன்றாவது சலுகை 349 ரூபாயாகும். இதன் மூலம் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி வழங்குகிறது. மேலும் 99 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் நீங்கள் ஜியோ பிரைம் உறுப்பினர் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு, 84 நாட்களுக்கு வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், 1,000 நிமிட மற்ற மொபைல் நெட்வொர்க் அழைக்க வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் 84 நாட்களுக்கு கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio offering 5 months of free data and unlimited call

Reliance jio offer.. Reliance jio offering 5 months of free data and unlimited call
Story first published: Sunday, August 16, 2020, 17:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X