விவசாயிகள் போராட்டம்.. ஜியோ டவர்கள் சேதம்.. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. வோடபோன், ஏர்டெல் பளிச்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல கட்டமாக இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தாலும், இது குறித்தான சூமுக நிலை, இதுவரையில் எட்டப்படவில்லை.

Recommended Video

வேளாண் சட்டங்களும், ஒப்பந்த விவசாயமும்.. தொடர்பு இல்லை.. கோர்ட்டுக்கு போன ரிலையன்ஸ்..!
 

இதற்கிடையில் விவசாயிகளின் இந்த போராட்டத்தில் ஜியோவின் மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சேதமானது இந்த போராட்டத்திற்கு மத்தியில் இருந்தாலும், இதன் பின்னணியில் போட்டியாளர்கள் உள்ளதாகவும் ஜியோ குற்றம் சாட்டி வந்தது.

ஏர்டெல், வோடபோன் மீது புகார்

ஏர்டெல், வோடபோன் மீது புகார்

விவசாயம் சம்பந்தமான மூன்று மசோதாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் 1400 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஜியோ புகாரளித்தது.

ஜியோவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை

ஜியோவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை

அதோடு ஜியோ நிறுவனம், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளாண் சட்டங்கள் மூலமாக, ஜியோ நிறுவனம் லாபம் பெறலாம் என்ற வதந்தியையும் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறானவை, இது மூர்க்கதனமானவை என்றும் வோடபோன் ஐடியாவும், பார்தி ஏர்டெல்லும் கூறியுள்ளன.

ஏர்டெல் மறுப்பு
 

ஏர்டெல் மறுப்பு

தங்களது வர்த்தகத்தினை பாதிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு மாற்றும்படி, கட்டாயப்படுத்தும் விதமாகவும், விவசாயிகள் போராட்ட களத்தின் பின்னணியில் ஏர்டெல் உள்ளதாகவும் ஜியோ கூறியுள்ளது. ஆனால் ஏர்டெல்லோ, ஜியோவின் இந்த மூர்க்கத்தனமான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கடந்த டிசம்பரிலேயே கூறியுள்ளது.

ஏர்டெல் மகிழ்ச்சி

ஏர்டெல் மகிழ்ச்சி

ஜியோ எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஏர்டெல்லுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும், ஜியோவின் கையில் இல்லை என ஏர்டெல் கூறியுள்ளது. அதோடு உண்மையில் வாடிக்கையாளர்களை ஜியோவிலிருந்து, ஏர்டெல்லுக்கு மாற சொல்லும் அளவுக்கு, ஏர்டெல் சர்வ வல்லமையுள்ளதாக இருக்கும் என்று, ஜியோ நம்புவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது.

வோடபோனும் மறுப்பு

வோடபோனும் மறுப்பு

அதோடு அப்படி ஒரு சக்தி எங்களிடம் இருந்திருந்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ பல வாடிக்கையாளர்களை குவித்தபோதே நாங்கள் அதனை பயன்படுத்தியிருப்போம் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. இதே இதற்கிடையில் வோடபோன் தரப்பில் ஜியோவின் இந்த ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக கூறியுள்ளது.

கற்பனையான குற்றச்சாட்டு

கற்பனையான குற்றச்சாட்டு

நாட்டின் எந்தவொரு நிறுவனத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் அளவுக்கு வோடபோன் இருக்காது. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு என்று தோன்றுகிறது என விஐஎல் கூறியுள்ளது. அதோடு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தும் தொலைத் தொடர்பு துறையின் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துவது குறித்து கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio’s tower damage case: Vodafone says jio’s charges against them baseless, false

Reliance jio’s tower damage case: Vodafone says jio’s charges against them baseless, false
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X