அசுர வளர்ச்சி காணும் ஜியோ..அடுத்தடுத்து குவியும் முதலீடு.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Recommended Video

அசுர வளர்ச்சி காணும் ஜியோ.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அடுத்தடுத்து முதலீடுகளை திரட்டி வருகின்றார்.

இந்த நிலையில் தனது மிகப்பெரிய வர்த்தகங்களில் ஒன்றான ஜியோவில் கணிசமான வளர்ச்சியினை கண்டு இருந்தாலும், இன்னும் மேம்படுத்த அடுத்தடுத்த முதலீடுகளை பெற்று வருகிறார் எனலாம்.

அதிகரித்து வரும் முதலீடுகள்

அதிகரித்து வரும் முதலீடுகள்

கடந்த சில வாரங்களில் மட்டும் இரண்டு மிகப்பெரிய முதலீடுகளை பெற்றுள்ளார். அவற்றில் சமூக வலைதளங்களின் ஜாம்பவான் ஆன பேஸ்புக் நிறுவனம் 9.9% பங்குகளை வாங்கியதன் மூலம் 43,534 கோடி ரூபாய் முதலீடு செய்தது. சில்வர் லேக் நிறுவனம் 1.5% பங்குகளை வாங்கியதன் மூலம் 5,655 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

விஸ்டா முதலீடு

விஸ்டா முதலீடு

இந்த நிலையில் தான் தற்போது விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் 2.3% பங்குகளை வாங்கியுள்ளதாகவும், அதன் மூலம் 11,367 கோடி ரூபாய் முதலீடும் செய்துள்ளது. ஆக மொத்தம் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜியோ இதுவரை 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசுர வளர்ச்சி காணும்
 

அசுர வளர்ச்சி காணும்

ஏற்கனவே குறைந்த காலத்தில் கணிசமான அளவு வளர்ச்சியினை கண்டுள்ள ஜியோ நிறுவனம், இந்த முதலீடுகள் மூலம் இன்னும் தொழில் நுட்ப ரீதியாகவும் இன்னும் வேகமாக வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உலகின் மிக உற்சாகமான மற்றும் பெரிய சந்தைகளில் ஒன்றை மையமாகக் கொண்ட ஒரு வலுவான தொழில் நுட்ப நிறுவனமாக ஜியோவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முதலீடும் உண்டு

முதலீடும் உண்டு

இதற்கிடையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இணைய தள மருந்து நிறுவனமான நெட்மேட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தினை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஏற்கனவே மளிகை பொருட்களை டெலிவரி செய்வதற்காக நெட்மெட்ஸ் உடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jio sells 2.3% stake to vista equity partners for Rs.11.367 crore

US based Vista equity partners will invest Rs.11,367 crore into jio platforms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X