அம்பானியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி அமேசான், பிளிப்கார்டுக்கு பிரச்சனை தான்.. களைகட்டிய ஜியோ மார்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதோ வந்தாச்சில்லா முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட். இனி அமேசான், பிளிப்கார்டு உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு பின்னடைவு தான்.

தான் எந்த தொழில் எடுத்தாலும், அதில் அதிரடியான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் கொடுத்து மக்களை தன் வசம் ஈர்க்கும் வல்லமை படைத்தவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி.

இந்த நிலையில் நீண்டகாலம் எதிர்பார்த்து கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட், ஆன்லைன் சில்லறை விற்பனை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஜியோமார்ட் விற்பனை தொடக்கம்

ஜியோமார்ட் விற்பனை தொடக்கம்

ரிலையன்ஸ் ஜியோவின் இ காமர்ஸ் தளமான ஜியோ மார்ட் பல மாத சோதனைகளுக்கு பிறகு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மார்ட் பின் கோடு அடிப்படையில் தற்போது சில இடங்களில் மட்டுமிருந்து ஆர்டர்களை பெற தொடங்கியுள்ளது. இதில் பல பொருள்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

வீட்டிற்கு தேவைப்படும் பொருட்கள்

வீட்டிற்கு தேவைப்படும் பொருட்கள்

இந்த இணையத்தில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் பண்ணை பொருட்களையும் விற்பனை செய்வதாகவும், அந்த பண்ணை பொருட்கள் நேரடியாக பிராண்டோடு ஒத்துழைக்கும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்தையும் ஷாப்பிங் செய்வதற்கான வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் என்றும் ஜியோமார்ட் தெரிவித்துள்ளது.

என்னென்ன பொருட்கள்?
 

என்னென்ன பொருட்கள்?

இது புதிய பழங்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய், பால் பொருட்கள், பிராணிகளுக்கான உணவு, வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், பர்சனல் கேர், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் என பலவும் விற்பனை செய்யப்பட பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பகுதியில் சேவை இருக்கிறதா?

இந்த பகுதியில் சேவை இருக்கிறதா?

சரி எப்படி நாம் இந்த தளத்தில் சென்று பொருட்களை வாங்குவது? https://www.jiomart.com/ என்ற இணையதளத்தினை நீங்கள் ஆர்டருக்கான பதிவினை செய்யும் போது உங்கள் ஆறு இலக்க பின் கோடினை கேட்கிறது. அதன் பின் உங்களது பகுதிகளில் சேவை இருக்கிறதா? இல்லையா? என்று தெரிவிக்கிறது.

 வாட்ஸ் அப்பும் கையொப்பம்

வாட்ஸ் அப்பும் கையொப்பம்

அண்மையின் தான் சமூக வலைதள ஜாம்பவான் ஆன பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய சிறுபான்மை பங்குதாரராகவும் பேஸ்புக் மாறியுள்ளது. அதோடு பேஸ்புக்கின் வாட்ஸ் அப் நிறுவனமும் ஜியோ மார்ட்டுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் ஆர்டர்

வாட்ஸ் அப்பில் ஆர்டர்

ஏற்கனவே ஜியோ மார்ட் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்களை வழங்கும் அம்சத்தினை வழங்கியது. இருப்பினும் இது நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டது. எனினும் விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் படிப்படியாக பிற சேவைகளை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி ஆர்டர் செய்வது?

எப்படி ஆர்டர் செய்வது?

அதுமட்டும் அல்ல ஜியோ மார்டில் ஒரு ஆர்டரை பெற பயனர்கள் வாட்ஸ் அப் வணிக எண் ஆன 88500 08000 என்ற எண்ணினை சேமிக்க வேண்டும். அதற்கு ஒரு ஹாய் அனுப்புவதன் மூலம் பயனர் பின் கோடிற்குள் நுழைய வழி நடத்தப்படுவார்கள் என்று ஜியோமார்ட் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே சேவையினை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் பிளிப்கார்டுக்கு போட்டி

அமேசான் பிளிப்கார்டுக்கு போட்டி

ஏற்கனவே கொரோனா காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள அமேசான், பிளிப்கார்டு நிறுவனங்களுக்கு, நிச்சயம் ஜியோ மார்ட் நிறுவனம் போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஜியோவில் எப்படி தனிக்காட்டு ராஜவாக வலம் வருகிறதோ, அதே போல இதிலும் தனது பலத்தினை முழுமையாக காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance jiomart website goes live, offers and discounts is there

Reliance jiomart website goes live and the company has also started receiving orders from serviceable pin codes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X