மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..? பதற்றத்தில் மருத்துவமனைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்பானி... பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. பின்ன, இந்தியாவின் நெருக்கடியான டெலிகாம் துறையிலேயே களம் இறங்கி மூன்றே ஆண்டுகளில் 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் பிடித்தால் யாருக்குத் தான் பயம் வராது.

ரிலையன்ஸ் எந்த வியாபாரத்தில், களம் இறங்கினாலும், களம் இறங்கும் போதே ஜியோவுக்கு கொடுத்தது போல இலவசம் அல்லது விலைக் குறைவு என்கிற ஆயுதங்களை கையில் எடுத்துவிடுகிறது.

அப்படி மருத்துவ பரிசோதனை வியாபாரத்திலும் செய்தால் மற்றவர்களின் பிழைப்பு காலி தானே..? அதனால் தான் தற்போது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை துறைகளில் வியாபாரம் செய்து வருபவர்கள் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்ன இந்த செய்தி உங்களுக்கு தான்..!

ரிலையன்ஸ்
 

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம், மருத்துவ பரிசோதனைத் துறையில் ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் என்கிற பெயரில் களம் இறங்க இருக்கிறதாம். இந்த ரிலயன்ஸ் லைஃப் சயின்ஸ் என்கிற நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுக்க

இந்தியா முழுக்க

இந்த ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க மருத்துவ பரிசோதனை லேப்களை திறக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் முதல் கட்டமாக 20 - 30 லேப்களை நிறுவ இருக்கிறார்களாம். முதல் கட்டமாக, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் லேப்களுடன் இணைந்து லேப்களை நடத்த டீல் பேசிக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பங்கு

பங்கு

15:85 விகிதத்தில், மொத்த விற்பனை அடிப்படையில், 85 சதவிகிதம் லேபை நடத்துபவரும், 15 சதவிகிதம் ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனமும் வருவாயை பங்கு போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம். அதோடு பிரான்சைஸ் எடுப்பவர்களே லேப்களை அமைத்துக் கொள்வதற்கான செலவுகளை எதிர் கொள்ள வேண்டும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மறுப்பு
 

மறுப்பு

இந்த தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என ரிலையன்ஸ் நிறுவனமே லைவ் மிண்ட் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறது. சரி வந்தவைகள் வதந்திகள் என்றே வைத்துக் கொள்வோம். ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் வலைதளமோ, bio-therapeutics (plasma proteins, biosimilars and novel proteins), pharmaceuticals (later-generation, oncology generics), clinical research services, regenerative medicine (stem cell therapies) and molecular medicine போன்ற துறைகளில் வியாபார வாய்ப்புகளை மேம்படுத்தி வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

உச்சம்

உச்சம்

ஏற்கனவே ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம், தன் துறையில் இருக்கும் அதி நவீன லேபை மும்பையில் இயக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த அதி நவீன லேப், நவி மும்பை பகுதியில் இருக்கும் திருபாய் அம்பானி லைஃப் சயின்ஸ் சென்டரில் இருக்கிறது. ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தில், மருத்துவ பரிசோதனை தொடர்பாக ஆராய்ச்சி செய்வது தொடங்கி வணிக ரீதியாக மருத்துவ பரிசோதனை இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பது வரை அனைத்து வசதிகளும் இருப்பதாகச் சொல்கிறது.

தரவுகள்

தரவுகள்

சமீபத்தில் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் 2018 அறிக்கைப் படி, இந்தியாவின் உயர் தர மருத்துவ சேவைகளுக்கான தேவை அதிகரித்து கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இதனால் மருத்துவ துறையின் தனியார் பங்கெடுப்பு அதிகரிக்கும் எனச் சொல்லி இருகிறார்கள். ஆக ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் உள்ளே வந்தால் திருப்தியாக கல்லா கட்டலாம்.

மருத்துவ பரிசோதனை துறையில் வலது கால் எடுத்து வைக்க இருக்கும் ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance may jump in to medical diagnostics business

The mukesh ambani leading reliance Industries limited has a subsidiary called Reliance Life science. This reliance life science may jump in to indina diagnostics business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X