சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள விலை சரிவும், அராம்கோ அறிவித்துள்ள 75 பில்லியன் டாலர் வருடாந்திர டிவிடென்ட் வாக்குறுதி ஆகியவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - சவுதி ஆராம்கோ மத்தியிலான ஒப்பந்தம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சந்தை ஆய்வு நிறுவனமான ஜெப்ரீஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - சவுதி ஆராம்கோ டீல் குறித்து ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வர்த்தக வளர்ச்சி தேக்கம் அடைக்கிறது என்பதை உணர்ந்து ரீடைல், டெலிகாம் துறைகளில் தனது வர்த்தகத்தை அதிரடியாக விரிவாக்கம் செய்து வருகிறார். குறிப்பாக ஜியோ மற்றும் ரீலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.45 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது.

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்
இந்நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை பிரிவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் O2C பிரிவு வர்த்தகத்தில் 20 சதவீத பங்குகளை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ-விற்கு விற்பனை செய்ய ஆகஸ்ட் 2019ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

குஜராத் ஜாம்ரநகர்
இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான குஜராத் ஜாம்ரநகரில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் சொத்துக்கள் இருக்கும் காரணத்தால் சவுதி ஆராம்கோ, இப்பிரிவின் 20 சதவீத பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியது.

ஏன் தாமதம்..?
ஆனால் கொரோனா தொற்றும், சவுதியின் நிதி நிலை, அராம்கோவின் மந்தமான வர்த்தக நிலை ஆகியவை காரணமாகக் கிட்டதட்ட 2 வருடமாக இந்த ஒப்பந்தம் செய்ய முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தாமதத்திற்கான காரணத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அராம்கோவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் - அராம்கோ டீல்
இந்நிலையில் ஜெப்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் O2C மற்றும் சவுதி அராம்கோ மத்தியிலான ஒப்பந்தம் தாமதமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள விலை சரிவும், அராம்கோ அறிவித்துள்ள 75 பில்லியன் டாலர் வருடாந்திர டிவிடென்ட் வாக்குறுதி ஆகியவை விளங்குகிறது.

கச்சா எண்ணெய் விலை
ஆனால் கச்சா எண்ணெய் விலை 65 டாலரில் சில மாதங்கள் நிலைப்பெற்றால் கண்டிப்பாக அராம்கோ ரிலையன்ஸ் O2C பங்குகளை வாங்க முடியும் என ஜெப்ரீஸ் தனது பார்வையில் கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் O2C
ரிலையன்ஸ் O2C பிரிவில் தற்போது பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மட்டும் அல்லாமல் ரீடைல் எரிபொருள் விற்பனை வர்த்தகத்தில் 51 சதவீத பங்குகளும் உண்டு. சவுதி அராம்கோ தற்போது டவுன்ஸ்ட்ரீம் வர்த்தகத்தில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் ரிலையன்ஸ் O2C சாதகமாகவே உள்ளது.

75 பில்லியன் டாலர் மதிப்பீடு
2019ல் ரிலையன்ஸ் O2C பிரிவு வர்த்தகம் சுமார் 75 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பீடு செய்யப்பட்டு, இரு தரப்பு நிறுவனங்கள் மத்தியிலும் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மார்ச் 2020ல் முடியவேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அராம்கோவின் முதலீட்டுத் திட்டம்
சவுதி அராம்கோ தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. அராம்கோ-வின் ஐபிஓ திட்டம் வெளியிடும் போது அப்ஸ்ட்ரீம் வர்த்தகத்தில் முதலீடு செய்வதை விடவும், வளரும் நாடுகளில் டவுன்ஸ்ட்ரீம் வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படும் என அறிவித்து இருந்தது.

சீனா முதலீடு
இதன் படி சீனாவில் Zhejiang பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய O2C வர்த்தகத்தில் சவுதி அராம்கோ அதிகளவிலான பாங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது அராம்கோ நிறுவனம் கடந்த சில வருடத்தில் செய்த மிகமுக்கியமான முதலீடாக விளங்குகிறது.

1000 பெட்ரோல் பங்க்
இந்த முதலீடு வாயிலாகச் சீனாவிற்கு நீண்ட காலக் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சீனா முழுவதும் ரீடைல் விற்பனை தளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக Sinopec உடன் கூட்டணியில் சுமார் 1000 ரீடைல் விற்பனை தளத்தை அராம்கோ அமைக்க உள்ளது.
சீனாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் சவுதி அராம்கோ..!
ரிலையன்ஸ் O2C: புதிய வர்த்தகப் பிரிவை உருவாக்கிய முகேஷ் அம்பானி..!