ரிலையன்ஸ்,ஓலா, ஹூண்டாய்.. ரூ.18100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு 10 நிறுவனங்கள் விண்ணப்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ், ஓலா, லார்சன் & டூப்ரோ, ஹூண்டாய் குளோபல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பிஎல்ஐ (PLI) திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து வெளியான செய்தியில் 10 நிறுவனங்கள் 18,100 கோடி ரூபாய் மதிப்பிற்கும் கீழான திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரி பிஎல்ஐ திட்டம் என்றால் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

புதிய நிறுவனத்தை உருவாக்கிய டாடா.. அமேசான், ரிலையன்ஸ் உடன் நேரடி போட்டி..!புதிய நிறுவனத்தை உருவாக்கிய டாடா.. அமேசான், ரிலையன்ஸ் உடன் நேரடி போட்டி..!

பிஎல்ஐ திட்டம் என்றால் என்ன?

பிஎல்ஐ திட்டம் என்றால் என்ன?

பிஎல்ஐ திட்டம் என்பது உற்பத்தி ஊக்குவிப்பு திட்டமாகும், இதன் மூலம் இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களாக மாற்ற இலக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த ஊக்குவிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு பல சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 1.46 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

10 நிறுவனங்கள் விண்ணப்பம்

10 நிறுவனங்கள் விண்ணப்பம்

ஆக இந்த திட்டத்தின் மூலம் பலனடையத் தான் 10 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனவாம். இடில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட், ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட், லூகஸ் டிவிஎஸ் லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், அமர ராஜா பேட்டரீஸ் லிமிடெட், எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட், லார்சன் & டூப்ரோ லிமிட்டெட், இந்தியா பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

உற்பத்தி மேம்படும்

உற்பத்தி மேம்படும்

கடந்த 22, அக்டோபர் 2021 அன்று பிஎல்ஐ திட்டத்திற்கான Request for Proposal கோரிக்கையை அரசு வெளியிட்டது. இது ஜனவரி 14, 2022 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த திட்டத்தில் 10 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இது நாட்டின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்கும். இது அடுத்த 2 இரண்டு ஆண்டுகளில் தங்களது உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட் இந்தியா அதிகரிக்கும்

மேட் இந்தியா அதிகரிக்கும்

அரசின் இந்த பி எல் ஐ திட்டமானது ஒவ்வொரு துறையிலும் தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்தும் என்பதோடு, உற்பத்தியினையும் மேம்படுத்தும். இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பல சலுகைகளும் வழங்கப்படுவதால், நிறுவனங்களும் பெரும் நன்மைகளை அடையும். இது மேற்கொண்டு முதலீடுகளை அதிகரிக்க தூண்டும். இது உற்பத்தியினை மேம்படுத்தும். மொத்தத்தில் மேட் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance, Ola, Hyundai and Lucas TVS among 10 bidders for govt's PLI scheme for batteries

Reliance, Ola, Hyundai and Lucas TVS among 10 bidders for govt's PLI scheme for batteries/ரிலையன்ஸ்,ஓலா, ஹூண்டாய்.. ரூ.18100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு 10 நிறுவனங்கள் விண்ணப்பம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X