தமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தற்போது ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ரீடைல் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் தாக்கம் பெரியதாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்றால் அது ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தான். சென்னை மக்களுக்கு எப்படிச் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறதோ, அதேபோலத் தான் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.

இதைச் சரியாக உணர்ந்துகொண்ட முகேஷ் அம்பானி கொங்கு மண்டல வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ளார்.

ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்

ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்

கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாநிலத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான வர்த்தகச் செய்து பல லட்ச நம்பிக்கையான வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.

இதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் நிறுவனம் தனது வர்த்தகத்தைத் தென்னிந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வந்தது ஆனால் அதற்குப் பல விஷயங்கள் தடையாக இருந்தது. இப்பிரச்சனைகளைக் களையும் வண்ணம் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியுள்ளது.

152.5 கோடி ரூபாய்

152.5 கோடி ரூபாய்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவனத்தைச் சுமார் 152.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது கிட்டதட்ட 20.81 மில்லியன் டாலர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிய சந்தைக்குள் நுழைகிறது. இதைத் தொடர்ந்து பல புதிய திட்டங்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வரவும் ரிலையன்ஸ் ரீடைல் முடிவு செய்துள்ளது.

29 கிளைகள்

29 கிளைகள்

1999ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், மளிகை பொருட்கள், என மக்களின் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 29 கிளைகளை வைத்து மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது. மேலும் 6 லட்சம் சுதுரடி அளவிலான வர்த்தக இடம் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் ரிலையன்ஸ் ரீடைல் பல நிறுவனங்களை வாங்க முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தொடர் நிறுவன கைப்பற்றல் மற்றும் வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் தற்போது ரிலையன்ஸ் பிரஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிய வர்த்தகப் பரிவை வைத்துள்ளது.

இன்று ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 2.4 லட்சம் கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail to acquire Tamil Nadu-based department store chain

Reliance Retail Ventures Ltd, a unit of billionaire Mukesh Ambani-led Reliance Industries Ltd, has acquired Coimbatore, Tamil Nadu-based Shri Kannan Departmental Store Pvt. Ltd to expand its operations in southern India. Reliance Industries said in a stock-exchange filing its subsidiary agreed to acquire Shri Kannan for Rs 152.5 crore.
Story first published: Friday, March 6, 2020, 9:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X