ஜியோமார்ட் ஆட்டம் ஆரம்பம்.. இனி பிளிப்கார்ட், அமேசானுக்குத் தலைவலி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி அடுத்தடுத்த பல திட்டங்களை அறிவித்து ஆன்லைன் ரீடைல் வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறார். இத்துறையில் ரிலையன்ஸ்-ன் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும், ஜியோ தொடர்ந்து பல்வேறு வகையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்குத் தயாராகும் எப்போதும் இல்லாத வகையில் ஆன்லைன் விற்பனையாளர்கள் மிகப்பெரிய முதலீட்டில் அதிகளவிலான இருப்புகளுடன் தயாராகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் படுமேகமாக வளர்ந்து வரும் ஜியோமார்ட் முக்கிய வர்த்தகப் பிரிவை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துள்ளது.

ஜியோமார்ட் திட்டமிட்டபடியே தீபாவளிக்கு முன்பு தனது ஆன்லைன் விற்பனை தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை கொண்டு வந்து அசத்தியுள்ளது. இது நாட்டின் முன்னணி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்-க்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..! சரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..!

ஜியோமார்ட்

ஜியோமார்ட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒவ்வொரு வர்த்தகப் பிரிவுகளுக்கும் பிரத்தியேகமாக ஆன்லைன் விற்பனை தளம் வைத்திருந்தாலும், மக்கள் அனைத்து பொருட்களையும் ஓரே இடத்தில் ஷாப்பிச் செய்யும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என நோக்குடன் துவங்கப்பட்டது தான் ஜியோமார்ட்.

ஜியோமார்ட் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் மிகப்பெரிய விளம்பர முதலீட்டு உடன் இயங்கி வருவதால் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

 

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ஜியோமார்ட் இதுநாள் வரையில் காய்கறி, மளிகை பொருட்கள், சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட ஆடை விற்பனை மற்றும் அதன் வர்த்தகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு கீழ் இயங்கி வந்தது.

இந்நிலையில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையைத் துவங்கியுள்ள நிலையில் இப்பிரிவு வர்த்தகம் முழுவதும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மேற்கொள்ள உள்ளது.

 

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ஜியோமார்ட்-ல் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை சேவையை மும்பையில் மட்டுமே துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில 7 முதல் 10 நாட்களில் நாடு முழுவதும் இருக்கும் முக்கியமான நகரங்களில் இச்சேவை விரிவாக்கம் செய்ய ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 700 நகரங்களில் 2000 கடைகளை வைத்து வர்த்தகம் செய்கிறது ரிலையன்ஸ் டிஜிட்டல்.

 

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

தற்போது ஜியோமார்ட் கிட்சன் அப்ளையன்ஸ், ஸ்மால் ஹோம் அப்ளையன்ஸ், மற்றும் எலக்ட்ரானிக் பர்சன்ல் கேர் பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஆப்பிள், சாம்சங், சோனி, ஜேபிஎல், பிளிப்ஸ், சான்டிஸ்க், பஜாஜ் ஆகிய பிராண்ட் பொருட்களையும் ஜியோமார்ட் மும்பையில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

2 வாரம்

2 வாரம்

இதுமட்டும் அல்லாமல் அடுத்த ஜியோமார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், லார்ஜ் அப்லையன்ஸ் பிரிவில் பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, மைக்ரோவேவ் ஓவன், டிவி ஆகியவற்றையும் விற்பனை செய்ய உள்ளது.

3 மணிநேரத்தில் டெலிவரி

3 மணிநேரத்தில் டெலிவரி

ஏற்கனவே ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் பல்வேறு தள்ளுபடி விற்பனைகளை நடந்து வரும் நிலையில், சிறப்புச் சலுகையாகப் பெரும் நகரங்களில் பொருட்களை ஆர்டர் செய்யப்பட்ட 3 மணிநேரத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் சிறப்புச் சலுகையை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிமுகம் செய்துள்ளது.

இதேபோன்ற விரைவான டெலிவரி சேவையை ஜியோமார்ட் தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

தீபாவளிக்கு முன்பு ஜியோமார்ட்-ன் புதிய சேவையின் அறிமுகம் நிச்சயம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

ஜியோமார்ட்-ன் இந்த அதிரடியை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் எப்படி எதிர்கொள்ளப் போகிறது..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance's JioMart introduced electronics products sale ahead of festive season shopping

Reliance's JioMart introduced electronics products sale ahead of festive season shopping
Story first published: Thursday, October 22, 2020, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X