Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க! 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலை. இந்த ஒற்றை வார்த்தை தான் இன்று பல நடுத்தர குடும்பங்களின் அச்சாணி. பொதுவாக, இந்தியா போன்ற நாடுகளில், குடும்பம் என்பது அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட குடும்பங்களில், பெரும்பாலும், அப்பா மட்டும் தான் சம்பாதிக்கக் கூடியவராக இருக்கிறார்.

அப்பாவின் வருமானத்தில் தான் வீட்டுக்கு அரிசி வாங்குவது தொடங்கி பிள்ளைகளை ஐஐடி, நீட் போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது வரை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்த கொரோனா வந்த பின், வேலை என்பதே நிச்சயம் இல்லாத, அதிகம் பிரச்சனைகளுக்கு உள்ளாகக் கூடிய விஷயமாக மாறிவிட்டது. பலருக்கு வேலை பறி போய்விட்டது, அடுத்த மாதம் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களோ, வேலையை காப்பாற்றிக் கொள்ள பல கடுமையான மன அழுத்தங்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள் பல அப்பாக்கள்.

லே ஆஃப்

லே ஆஃப்

ஓலா, உபர், ஸ்விக்கி, பேடிஎம், லிவ் ஸ்பேஸ், ஷேர் சாட்... என பல கம்பெனிகளில் லே ஆஃப் செய்து கொண்டே இருக்கிறார்கள். பல நடுத்தர வயதினர்கள், அடுத்த வேலைக்காக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார சூழல் சரியானதாகத் தெரியவில்லை. சரி ரெனால்ட் வாகன கம்பெனியின் விஷயத்துக்கு வருவோம்.

ஆட்டோமொபைல்
 

ஆட்டோமொபைல்

ரெனால்ட் என்கிற பிரான்ஸ் நாட்டின் ஆட்டோமொபைல் கம்பெனி, கடந்த வெள்ளிக் கிழமை அன்று, தன் கம்பெனியில் இருந்து சுமாராக 15,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்து, ஊழியர்களின் வயிற்றில் பகீர் கிளப்பி இருக்கிறது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில், சுமாராக 2 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாம்.

எந்த நாட்டில் ஆட் குறைப்பு

எந்த நாட்டில் ஆட் குறைப்பு

பிரான்ஸில் தான் ரெனால்ட் கம்பெனியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. எனவே பிரான்ஸில் மட்டும் சுமாராக 4,600 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். உலகம் முழுக்க ரெனால்ட் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களில் மீதமுள்ள 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம்.

10 %-க்குக் கீழ் தான்

10 %-க்குக் கீழ் தான்

ஒட்டு மொத்தமாக ரெனால்ட் வாகன தயாரிப்பு கம்பெனியில், உலகம் முழுக்க, 1,80,000 பேர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். அதில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான ஊழியர்களைத் தான், லே ஆஃப் செய்ய இருப்பதாக, ரெனால்ட் கம்பெனி நிர்வாகமே சொல்லி இருக்கிறது. ரெனால்ட் கம்பெனியின் மொத்த பங்கில் சுமார் 15% பங்குகளை பிரான்ஸ் நாட்டு அரசாங்கமே வைத்திருது என்பது கூடுதல் செய்தி.

உற்பத்தி திட்டம்

உற்பத்தி திட்டம்

ரெனால்ட் நிறுவனத்தின் ஒட்டு மொத்த உலக உற்பத்தி கெபாசிட்டி, 2019-ம் ஆண்டு 4 மில்லியனாக இருந்தது. ஆனால் இப்போது அந்த அளவை மாற்றி 2024-ம் ஆண்டுக்கே 3.3 மில்லியனாக குறைத்து இருக்கிறது. கொரோனா காலத்தில் சட்டென வேலையை விட்டு தூக்கிய ஊழியர்கள் சாப்பாட்டு என்ன செய்வார்கள்? எப்போது அவர்களுக்கு வேலை கிடைக்கும்? என பல கேள்விகள் எழுகிறது. ஆனால் அதற்கு யார் பதில் சொல்வார்கள் என்று தான் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Renault Layoff: 15000 renault employees job gone

Renault Layoff: The french car maker Renault had announced 15,000 job cut on Friday. Around 4,600 job cuts in France and more than 10,000 job cuts would be in rest of the world.
Story first published: Sunday, May 31, 2020, 17:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X