மால் ஓனர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பணமழை கொட்டுவதாக தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மால்கள் வாடகை வருமானம் இந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் அதிகமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மால்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மால் ஓனர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்தைய ஆண்டுகளை விட வருமானம் அதிகம் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், மால்கள், தொழிற்சாலைகள் நிம்மதி!இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், மால்கள், தொழிற்சாலைகள் நிம்மதி!

மால்கள் வளர்ச்சி

மால்கள் வளர்ச்சி

இந்தியாவில் நாளுக்கு நாள் மால்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும் புதிய மால்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மால்களில் ஒரு ஸ்டால் போட வேண்டும் என்று பல வர்த்தகர்களின் கனவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை உயர்வு

வாடகை உயர்வு

இதன் காரணமாக மால்கள் உள்ள கடைகளுக்கு அதிக தேவை இருப்பதால் வாடகையை மால்களின் ஓனர்கள் உயர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். இதனால் மால்களின் வாடகை வருமானம் 2023 ஆம் நிதி ஆண்டில் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

நுகர்வோர்
 

நுகர்வோர்

ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SCAI) தலைவர் மற்றும் குவெஸ்ட் ப்ராப்பர்டீஸ் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ முகேஷ் குமார் கூறுகையில், பெருநகரங்கள் மற்றும் அடுத்தகட்ட நகரங்களில் நுகர்வோர் உணர்வு நேர்மறையானதாக உள்ளது. கடந்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளில், வணிக வளாகங்கள் அதிக வருவாய் மற்றும் வருவாய் அடிப்படையில் வலுவான மீட்சியைக் கண்டுள்ளன. குறிப்பாக மல்டிபிளக்ஸ் செயல்பாடுகளின் முழு அளவிலான மீண்டுள்ளதை அடுத்து நுகர்வோர்களின் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

ஒப்பந்தங்கள்

ஒப்பந்தங்கள்

இதன் காரணமாக மால் உரிமையாளர்களின் வாடகை வருமானம் ஒரு எழுச்சியை காண்கிறது. பிராண்டுகளுடன் கூடிய புதிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விட 15-20 சதவீதம் அதிக வாடகையில் கையொப்பமிடப்படுகின்றன. தற்போதுள்ள ஒப்பந்தங்கள் கூட விதிமுறைகளைப் பொறுத்து நல்ல உயர்வை கண்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

விற்பனை அதிகம்

விற்பனை அதிகம்

DLF ரீடெய்ல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புஷ்பா பெக்டர் கூறுகையில், மால்களில் உள்ள கடைகளின் வாடகைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அதற்கு முக்கிய காரணம் விற்பனை அதிகரிப்பே. இதனால் மால்களில் உள்ள கடைகளின் வாடகைகள் 20-25 சதவீதம் உயர்ந்துள்ளன. கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது விற்பனை கிட்டத்தட்ட 115-120 சதவீதம் அதிகரித்துள்ளது' என்று கூறினார்.

வாடகை வருமானம்

வாடகை வருமானம்

ICRA அமைப்பின் மதிப்பீட்டின்படி, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய மால்களில் 2022ஆம் நிதியாண்டில் முழு ஆண்டு அடிப்படையில் வாடகை வருமானம் கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளில் இருந்து 80 சதவீதத்தை எட்டியுள்ளது.

 2023ஆம் நிதியாண்டு

2023ஆம் நிதியாண்டு

கார்ப்பரேட் ரேட்டிங்ஸ், ICRA அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் துறைத் தலைவர் அனுபமா ரெட்டி இதுகுறித்து கூறியபோது, 'மால்களில் உள்ள வணிக வளாகங்களின் வாடகை வருமானம் அடுத்த நிதியாண்டில் அதாவது 2023ஆம் ஆண்டில் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ஆம் நிதியாண்டின் மால் வருமானத்தை விட 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை தற்போது அதிகமாக உள்ளது. வர்த்தக மதிப்புகளை பொருத்தவரை வரும் 2023ஆம் ஆண்டின் நிதியாண்டில் இன்னும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rental income of malls to increase by 30 percent, To surpass pre-Covid levels in FY23

Rental income of malls to increase by 30 percent, To surpass pre-Covid levels in FY23 | மால் ஓனர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பணமழை கொட்டுவதாக தகவல்
Story first published: Tuesday, July 12, 2022, 7:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X