நகரத்து மக்களால் கிராமத்தில் பெரிய மாற்றமில்லை..! உண்மை உடைக்கும் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே கிராமத்து மக்கள் தான் வேலைவாய்ப்புக்காகப் பெரு நகரங்களுக்குச் செல்வது வழக்கம், இது உலகம் முழுக்க நடக்கும் விஷயம் என்பதால் பெரிய அதியசம் ஒன்று இல்லை.

ஆனால் இந்தக் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுக் கடைகள், வர்த்தகம், அலுவலகம் என அனைத்தும் மூடப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வரும் வேளையில், பலர் நகரத்தில் வேலைவாய்ப்பை இழந்தனர்.

இதனால் எப்போதும் இல்லாமல் நகரங்களில் இருந்து பெரும் பகுதி மக்கள் சொந்த ஊருக்கு அதாவது கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளுக்கு வந்தனர்.

வீட்டில் இருந்து தான் வேலை செய்யப்போகிறோம் என்பதால் அலுவலக ஊழியர்களுக்கும், வேலை இல்லாமல் தவித்த சாமானிய ஊழியர்கள் வேறு வழி இல்லாமல் சொந்த ஊருக்கு வந்தனர்.

கிராமம் மற்றும் ஊரகப் பகுதி

கிராமம் மற்றும் ஊரகப் பகுதி

பெரும் பகுதி மக்கள் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு வந்த காரணத்தால் கிராம பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நகர்வு அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது, ஆனால் உண்மையில் ஊரகப் பகுதியில் நுகர்வு அளவில் பெரிய மாற்றங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என நிறுவனங்கள் கூறுகிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்றின் முதல் அலையில் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பெரிய அளவிலான தொற்றுப் பாதிப்புகள் இல்லை, இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளும், வர்த்தகப் பாதிப்புகளும் பெரிய அளவில் இல்லை, இதனால் நகரங்களைக் காட்டிலும் கிராமத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தது.

விநியோக நெட்வொர்க்

விநியோக நெட்வொர்க்

ஆனால் கிராமங்களில் விநியோக நெட்வொர்க் மிகவும் குறைவு என்பதால் முதல் அலையில் பெரிய அளவிலான நுகர்வு மற்றும் வர்த்தக வளர்ச்சி இல்லை என மாரிக்கோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் குப்தா தெரிவித்துள்ளார்.

கன்டார் அமைப்பு

கன்டார் அமைப்பு

மேலும் கன்டார் என்னும் அமைப்புக் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் 10 சதவீத குடும்பங்களில் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் இவர்களின் மாதாந்திர நுகர்வு அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லை (லாக்டவுன் காலம் மற்றும் லாக்டவுன் அல்லாத காலம்) எனவும் தெரிவித்துள்ளனர் எனக் கன்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வு அளவு

நுகர்வு அளவு

உதாரணமாகக் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் நகரங்களில் இருந்து கிராமத்திற்கு வந்த குடும்பங்கள் மாதம் 114 முதல் 126 கிலோ மளிகை பொருட்களை வாங்கியுள்ளனர். கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளிலேயே இருக்கும் மக்கள் எப்போதும் போலவே 120 கிலோ நுகர்வு பொருட்களை வாங்கியுள்ளனர். இது 2வது அலையிலும் இதே நிலை தான் என நுகர்வோர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு

மத்திய மற்றும் மாநில அரசு

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பால் உணவு பொருட்களுக்காகச் செலவிடும் தொகை மக்கள் கணிசமாகச் சேமித்துள்ளனர், இதனால் மக்கள் இந்தத் தொகை பிற பொருட்களுக்குச் செலவு செய்துள்ளனர்.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

இக்கொரோனா காலகட்டத்தில் சப்ளை டிமாண்ட் பிரச்சனை இருந்த காரணத்தால் கோதுமை போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை எனப் பார்லே நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளது.

 வேலைவாய்ப்பு இழப்பு

வேலைவாய்ப்பு இழப்பு

ஆனால் இதேவேளையில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்த காரணத்தால் பல கோடி குடும்பங்கள் வருமானத்தை இழந்தது. இதன் காரணமாகவும் நாடு முழுவதும் நுகர்வு அளவுகள் குறைந்திருக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

பெரிய மாற்றம் இல்லை

பெரிய மாற்றம் இல்லை

இதனால் நகரத்தில் இருந்து கிராமத்திற்குச் சென்ற மக்களால் கிராமங்களில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏற்படவில்லை, அதேவேளையில் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியும் தற்காலிகமானது எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reverse migration doesn't impact Rural economy and consumption

Reverse migration doesn't impact Rural economy and consumption
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X