ஓரே நாளில் ரூ.740000 கோடி இழப்பு.. அமெரிக்க பணக்காரர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்டதைத் தாண்டி 8.3 சதவீதமாகப் பதிவான நிலையில் பெடரல் வங்கி மீண்டும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது.

 

வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மந்த நிலை உருவாகும், நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு அதிக வட்டியை செலுத்த வேண்டும், இதனால் லாபம் குறையும் இப்படிப் பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தனர்.

இதனால் டாவ் ஜோன்ஸ் சுமார் 1200 புள்ளிகள் சரிந்து அமெரிக்கா பணக்கார்களின் சொத்து மதிப்பில் பெரிய ஓட்டைப்போட்டு உள்ளது.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..! அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

 93 பில்லியன் டாலர்

93 பில்லியன் டாலர்

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் ஒரு நாளில் மட்டும் அமெரிக்கப் பணக்காரர்கள் சுமார் 93 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். இது அமெரிக்க வரலாற்றில் 9வது மோசமான ஒரு நாள் சரிவாகும்.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

அமெரிக்கப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்றைய சரிவால் அதிகம் பாதிக்கப்பட்டது அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தான், இவருடைய சொத்து மதிப்புச் செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 9.84 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிந்து மொத்த சொத்து மதிப்பு அளவு 150 பில்லியன் டாலராக உள்ளது.

டாப் பணக்காரர்கள்
 

டாப் பணக்காரர்கள்

இதேபோல் எலான் மஸ்க் 8.35 பில்லியன் டாலர் இழப்பு, இதேபோல் மார்க் ஜூக்கர்பெர்க், லேரி பேஜ், செர்கி பிரின், ஸ்டீவ் பால்மர் ஆகியோர் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். மேலும் வாரன் பபெட் 3.4 பில்லியன் டாலர் மற்றும் பில் கேட்ஸ் 2.8 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

அமெரிக்கப் பங்கு சந்தை

அமெரிக்கப் பங்கு சந்தை

அமெரிக்கச் சந்தையின் பங்கு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில் டாவ் ஜோன்ஸ் 1200 புள்ளிகள் சரிந்தது மட்டும் அல்லாமல் எஸ் & பி குறியீடு 4.4 சதவீதமும், நாஸ்டாக் 100 இன்டெக்ஸ் 5.5 சதவீதமும் சரிந்துள்ளது. ஜூன் 2020-க்குப் பின் இது மோசமான சரிவாகும்.

 500 பணக்காரர்கள்

500 பணக்காரர்கள்

ஒட்டுமொத்தமாக, உலகின் 500 பணக்காரர்களின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 1.2 டிரில்லியன் டாலர் குறைவாக உள்ளது.

மார்க ஜூக்கர்பெர்க்

மார்க ஜூக்கர்பெர்க்

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க். இன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் 68.3 பில்லியன் டாலர் இழந்து அவரது மொத்த சொத்து மதிப்பில் சுமார் 54 சதவீதத்தை இழந்துள்ளார், அதே நேரத்தில் Binance சிஇஓ Changpeng Zhao 61 பில்லியன் டாலர் இழந்து அவரது மொத்த சொத்து மதிப்பில் சுமார் 64 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richest Americans Lose $93 Billion After 8.3 percent Inflation; Nasdaq, dow jones fall worst

Richest Americans Lose $93 Billion After 8.3 percent Inflation; Nasdaq, dow jones fall worst after june2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X