20 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. 5 முக்கிய பயணங்கள்.. நீதா அம்பானி பட்டியல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்பல சரவெடி அறிவிப்புகளுடன் ரிலையன்ஸின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகின்றது.

 

வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நடந்து வரும் இந்த 44 வருடாந்திர கூட்டத்தில் பேசிய நீதா அம்பானி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆக்சிஜன் முதல் பணியாளர் பராமரிப்பு என ஐந்து மிகப்பெரிய பயணங்களை ரிலையன்ஸ் பவுன்டேஷன் தொடங்கியது.

இது மிஷன் ஆக்சிஜன், மிஷன் கோவிட் இன்ஃப்ரா, மிஷன் அன்ன சேவா, மிஷன் ஊழியர் பராமரிப்பு, மிஷன் தடுப்பூசி சுரக்ஷா உள்ளிட்ட 5 அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி

ஆக்சிஜன் உற்பத்தி

இந்தியாவில் கொரோனா பரவலின் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. அந்த சமயத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை வாங்குவது உள்ளிட்ட பலவேறு முயற்சிகளை ரிலையன்ஸ் கையாண்டது. கடந்த பல வருடங்களாக மிக மோசமான நெருக்கடியான காலகட்டங்களில், எங்களால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்து வருகிறோம்.

கொரோனா உள்கட்டமைப்பு வசதி

கொரோனா உள்கட்டமைப்பு வசதி

கோவிட் பராமரிப்பு உள்கட்டமைப்பு பற்றி பேசியவர், கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் வேகமாக பரவிய காலகட்டத்தில், 250 படுக்கை வசதி கொண்ட கோவிட் வசதியை மும்பையில் அர்பணித்தோம். இரண்டாவது அலை தாக்கிய நேரத்தில், மும்பையில் மட்டும் கோவிட் பராமரிப்புக்காக கூடுதலாக 875 படுக்கைகளை உருவாக்கினோம். தற்போது நாடு முழுவதும், கோவிட் பராமரிப்புக்காக மொத்தம் 2000க்கும் மேற்பட்ட படுக்கைகளை உருவாக்கியுள்ளோம்.

கொரோனா சோதனையகம்
 

கொரோனா சோதனையகம்

இவை அனைத்தும் தடையற்ற ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் முற்றிலும் இலவசமாக சிகிச்சையளிக்க வசதியாக உள்ளன. ஒரு நாளைக்கு 15,000க்கும் மேற்பட்ட சோதனைகள் திறன் கொண்ட கோவிட் சோதனை ஆய்வகத்தை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியது.

ஊழியர்களின் மீதான அக்கறை

ஊழியர்களின் மீதான அக்கறை

மிஷன் ஊழியர் பராமரிப்பு பயணம் என்பது, ரிலையன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களான கவனிப்பு மற்றும் அக்கறையின் வெளிப்பாடு தான் இது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட, வேலைகள், சம்பளங்கள், போனஸ் போன்ற எதுவும் குறைக்கப்படவில்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஈடு செய்ய முடியாத இழப்பு

அதோடு கொரோனா தொடர்பான மருத்துவ செலவுகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படி கடினமான முயற்சிகள் இருந்தபோதிலும், ரிலையன்ஸ் குடும்பத்தின் சில ஈடு செய்ய முடியாத உறுப்பினர்களை தொற்றுநோயால் இழந்தோம் என்பது இதயங்களை உடைக்கிறது. எங்கள் மனதில் அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை எதுவும் நிரப்ப முடியாது என நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

இறந்த ஊழியர்களுக்காக

இறந்த ஊழியர்களுக்காக

கொரோனாவால் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயிரிழந்த ஊழியரின் சம்பளத்தை, ரிலையன்ஸ் தொடர்ந்து குடும்பத்திற்கு செலுத்தும். குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை இந்தியாவில் கட்டணம் செலுத்தும், குடும்பத்திற்கு மருத்துவ பாதுகாப்பு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக கூடுதலாக, கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

மிஷன் தடுப்பூசி சுரக்ஷா

மிஷன் தடுப்பூசி சுரக்ஷா

ரிலையன்ஸின் அடுத்த முக்கியமான பணி மிஷன் தடுப்பூசி சூரக்ஷா கொரோனாவிலிருந்து ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாத்து கொள்ள, தடுப்பூசி தான் இப்போது முன்னுரிமை. ரிலையன்ஸ் பவுன்டேஷன் மூலமாக கிட்டதட்ட 20 லட்சத்திற்கும மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL AGM 2021: reliance foundation launched five missions, says nita ambani

RIL AGM 2021 latest updates.. Reliance foundation launched five missions, says nita ambani
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X