இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்கரீஸ் குழுமத்தின் உரிமையாளர் என்றாலும் அவரது பணிக்கு வருடமும் ரிலையன்ஸ் நிர்வாகம் சம்பளம் கொடுக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு பெறும் நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 11 வருடமாக 15 கோடி ரூபாய் சம்பளத்தையே பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வருடமும் 15 கோடி ரூபாய் சம்பளத்தையே தொடருவதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானியின் 63 பில்லியன் டாலர் சொத்து மதிப்பிற்கு முன் இந்த 15 கோடி ரூபாய் சம்பளம் என்பது தூசி போல் இருந்தாலும், கொரோனா எதிரொலியாக நிறுவனத்திற்குக் கூடுதல் செலவுகள் இருக்கக் கூடாது என்பதற்காக 12வது வருடமாகவும் அதே 15 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெறுகிறார் முகேஷ் அம்பானி.
எகிறிய அம்பானி சொத்து மதிப்பு! 2 மாதத்தில் 18 பில்லியன் டாலராம்!

15 கோடி ரூபாய் சம்பளம்
முகேஷ் அம்பானி 2019-20ஆம் நிதியாண்டுக்குச் சம்பளம், கொடுப்பனவு, போனஸ் என அனைத்தையும் தேர்த்துத் தான் 15 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெறுகிறார்.
ஆனால் இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் இருக்கும் முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மற்றும் ஹிதால் ஆகியோரின் சம்பளம் 20 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இவர்களின் சம்பளம் ஒவ்வொரு வருடம் கணிசமாக உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிற முக்கிய நிர்வாகத் தலைவர்களான PMS பிரசாத், பவன் குமார் கபில் ஆகியோரின் சம்பளமும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு
ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்த முகேஷ் அம்பானி தனது மொத்த சம்பளத்தையும் இந்த வருடம் தியாகம் செய்ய முடிவு செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் நிறுவனத்தின் வர்த்தகம் திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பும் வரையில் தான் சம்பளம் பெற போவது இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

நீதா அம்பானி
இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன non-executive director-ஆக இருக்கும் முகேஷ் அம்பானியின் சம்பளம் நீதா அம்பானியின் சம்பளம் கடந்த வருடத்தில் 1.65 கோடி ரூபாயில் இருந்து 1.15 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஊழியர்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் தங்களது மொத்த சம்பளத்தில் 30 முதல் 50 சதவீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் வர்த்தகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தனிப்பட்ட சம்பள குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.
15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை வாங்கும் ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பள குறைப்பு குறைக்கப்பட்டு உள்ளது. 15 லட்சம் ரூபாய் கீழ் சம்பளம் வாங்குவோருக்கு எவ்விதமான சம்பள குறைப்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் நிர்வாகம்.

போனஸ்
இதுமட்டும் அல்லாமல் இந்த வருடம் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது எனவும் ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.