நைகா-விற்கு போட்டியாக ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி இதையும் விட்டு வைக்கவில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவின் வர்த்தகத்தில் தான் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்து இருந்தாலும், ஜியோவின் வெற்றிக்கு பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் கவனம் அனைத்தும் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தின் மீது மட்டுமே உள்ளது.

இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மலிவான விலையில் டெலிகாம் சேவையைக் கொடுத்து கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களைக் குறைந்த காலகட்டத்தில் பெற்றுள்ள நிலையில், இந்த வாடிக்கையாளர்கள் பலத்தை வைத்து தனது ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி


2020 முதல் முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகம் குறிப்பாக இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல நிறுவனங்களைக் கைப்பற்றி மரத்திலிருந்து பர்னிச்சர் வரையில் பல பிரிவில் வர்த்தகத்தைத் துவங்கியது.

 நைகா-வின் வெற்றி

நைகா-வின் வெற்றி

இந்நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச்சந்தை ஐபிஓ-வில் கலக்கிய நைகா-வின் வெற்றி முகேஷ் அம்பானிக்கும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கும் மிகவும் பிடித்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் இறங்க முடிவு செய்து இதற்கான திட்டத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ்.

 அழகு சாதான பொருட்கள்

அழகு சாதான பொருட்கள்

முகேஷ் அம்பானி ஏற்கனவே கைப்பற்றிய Fynd மற்றும் நெட்மெட்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் உதவிகள் உடன் நைகா மற்றும் வால்மார்ட்-ன் மின்திரா ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாகக் காஸ்மெட்டிக்ஸ் டூ பேஷன் பொருட்களுக்கான வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

 Fynd மற்றும் நெட்மெட்ஸ்

Fynd மற்றும் நெட்மெட்ஸ்

தற்போது வெளியான தகவல்கள் படி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் காஸ்மெட்டிக்ஸ் டூ பேஷன் பொருட்களுக்கான ஈகாமர்ஸ் தளத்தில் நெட்மெட்ஸ் சரக்கு கிடங்கு மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் பணிகளையும், Fynd நிறுவனம் ஈகாமர்ஸ் தளத்தின் Frontend மற்றும் கஸ்டமர் இன்டர்பேஸ்-க்கான பணிகளைச் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

 ரிலையன்ஸ் ரீடைல்-ன் Tiara

ரிலையன்ஸ் ரீடைல்-ன் Tiara

ரிலையன்ஸ் வழக்கம் போல் தனது காஸ்மெட்டிக்ஸ் டூ பேஷன் வர்த்தகத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் Tiara எனப் புதிய பிராண்டை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார். மேலும் இப்புதிய திட்டத்திற்கு Project Adore என்ற பெயரும் வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 டாடா குழுமம்

டாடா குழுமம்

இதேவேளையில் சில நாட்களுக்கு டாடா குழுமம் காஸ்மெட்டிக்ஸ் வர்த்தகத்தில் மீண்டும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து துறையிலும் பெரிய நிறுவனங்கள் துவக்கத்திலேயே குறிப்பிட்ட அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுவிட்டால் அடுத்த 5 முதல் 10 வருடத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வர்த்தகத்தை உருவாக்க முடியும். இதற்காகவே டாடா முதல் ரிலையன்ஸ் வரையில் அடுத்தடுத்து புதிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL entering into online cosmetics industry with brand Tiara to take on Nykaa, Myntra

RIL entering into online cosmetics industry with brand Tiara to take on Nykaa, Myntra நைகா-விற்குப் போட்டியாக ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி இதையும் விட்டு வைக்கவில்லை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X