ரிஷி சுனக் குடும்பம் பிரிட்டன் வந்தது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இங்கிலாந்து மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். காரணம் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் தான்.

பலரும் பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல் வெளிநாட்டவர் அதாவது பிரிட்டன் வம்சாவளியை அல்லாதவர் எனப் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆசிய வம்சாவளி பிரிவில் தான் ரிஷி சுனக் முதல் பிரிட்டன் பிரதமர்.

இதற்கு முன்பு Benjamin Disraeli என்ற யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் 2 முறை பிரதமராகியுள்ளார்.

மருமகன் ரிஷி சுனக்-கிற்கு மாமனார் நாராயணமூர்த்தி செய்த காரியம்.. இப்போ பிரதமர் பதவி..! மருமகன் ரிஷி சுனக்-கிற்கு மாமனார் நாராயணமூர்த்தி செய்த காரியம்.. இப்போ பிரதமர் பதவி..!

பெஞ்சமின் டிஸ்ரேலி

பெஞ்சமின் டிஸ்ரேலி

பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் 20 பிப்ரவரி 1874 - 21 ஏப்ரல் 1880 மற்றும் 27 பிப்ரவரி 1868 - 1 டிசம்பர் 1868 ஆகிய காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இவருடைய தந்தை ஐசக் டி'இஸ்ரேலி பிரிட்டிஷ் எழுத்தாளர். இவருடைய தாத்தா Benjamin D'Israeli இவர் இத்தாலியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு வணிகர் ஆவார்.

ரிஷி சுனக் - எப்படி இந்தியர்..?

ரிஷி சுனக் - எப்படி இந்தியர்..?

ரிஷி சுனக் எப்படி இந்திய வம்சாவளியை சார்ந்து வருகிறார், இவருடைய தாய், தந்தை பிறந்தது எங்கே..? கென்யாவுக்கும் ரிஷி சுனக்-கிற்கும் என்ன தொடர்பு..? ரிஷி சுனக் தாய்வழி, தந்தை வழி தாத்தா பாட்டி எந்த நாட்டைச் சேர்ந்தவர்..?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

ரிஷி சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் நாட்டின் சவுத்தாம்ப்டன் பகுதியில் இந்திய வம்சாவளியே சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்குப் பிறந்தார். ரிஷி சுனக் பெற்றோர்கள் இருவருமே ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள்.

யாஷ்வீர் - உஷா

யாஷ்வீர் - உஷா

அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் (இன்றைய கென்யா) பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா, இதே கென்யாவின் Tanganyika பகுதியில் பிறந்தவர் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).இவர்களின் குடும்பம் பிரிட்டனுக்கு மாறிய பின்பு யஷ்வீர் ஒரு மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தனர். உஷா உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார்.

யஷ்வீர் குடும்பம்

யஷ்வீர் குடும்பம்

அவரது தாத்தா பாட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள், மேலும் 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் UK க்கு குடிபெயர்ந்தனர்.

ராம்தாஸ் சுனக்

ராம்தாஸ் சுனக்

ரிஷி சுனக்-ன் தாத்தா-வான ராம்தாஸ் சுனக் குஜ்ரன்வாலா என்னும் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய காலத்தில் பிறந்தார், தற்போது இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. ராம்தாஸ் சுனக் 1935ல் குமாஸ்தா-வாகப் பணியாற்றத் தனது மனைவி சுஹாக் ராணி சுனக் உடன் நைரோபிக்கு சென்றார்.

ரகுபீர் சைன் பெர்ரி

ரகுபீர் சைன் பெர்ரி

இதேபோல் ரிஷி சுனக் தாய் வழி தாத்தாவான ரகுபீர் சைன் பெர்ரி MBE, Tanganyika-வில் வரி அதிகாரியாகப் பணிபுரிந்தார். இதைத் தொடர்ந்து மேலும் 16 வயதான Tanganyika-வில் பிறந்த ஸ்ரக்ஷா-வை திருமணம் செய்தார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன, இவர்களுடைய குடும்பம் 1966 இல் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது.

யாஷ்வீர் மற்றும் உஷா திருமணம்

யாஷ்வீர் மற்றும் உஷா திருமணம்

பிரிட்டனுக்கு க்கு குடிபெயர்ந்த பின்பு ரகுபீர் சைன் பெர்ரி Inland Revenue பிரிவின் கலெக்டர்-ஆகப் பணியில் சேர்ந்தார், இதேவேளையில் ராம்தாஸ் சுனக்-ன் குடும்பமும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது. பிரிட்டனில் யாஷ்வீர் மற்றும் உஷா ஆகியோர் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rishi sunak will be 2nd UK Prime minister with non-britian ethnicity

rishi sunak will be 2nd UK Prime minister with non-britian ethnicity; Benjamin Disraeli holds UK Prime minister chair two times from a minority community in Britain
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X