117 வருட வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோல்ஸ் ராய்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் தனது 117 வருட வரலாற்றில் கொரோனா தொற்று பாதித்த 2021ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

 

2020ல் துவங்கி 2021 வரையில் கொரோனா தொற்று மூலம் உலக நாடுகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது, ஆனால் இதே காலக்கட்டத்தல் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பும் தாறுமாறாக உயர்ந்தது.

அணு உலை கட்டும் ரோல்ஸ் ராய்ஸ்.. எதற்காக.. எங்கு..?

 ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

இதன் வாயிலாக 2021ல் ரோல்ஸ் ராய்ஸ் மட்டும் அல்லாமல் ஆடம்பர பொருட்களின் விற்பனை அனைத்தும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2021ஆம் ஆண்டில் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வரலாறு காணாத விதமாக ஓரே வருடத்தில் 5,586 கார்களை விற்பனை செய்து புதிய சாதனையைப் படைத்தது.

 5,586 கார்கள் விற்பனை

5,586 கார்கள் விற்பனை

2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ல் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 117 வருட வரலாற்றில் 2021ல் தான் அதிகப்படியான கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் 50 நாடுகளில் 5,586 கார்களை விற்பனை செய்துள்ளதாகப் பெருமையுடன் ரோல்ஸ் ராய்ஸ் கூறுகிறது.

 சிப் தட்டுப்பாடு
 

சிப் தட்டுப்பாடு

2021ல் ஆட்டோமொபைல் துறை சிப் தட்டுப்பாடு, உதிரிப்பாகங்கள் தட்டப்பாடு எனப் பல பிரச்சனை காரணமாகக் கார் விற்பனை மட்டும் அல்லாமல் கார் உற்பத்தியும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது.

 ஆடம்பர கார்

ஆடம்பர கார்

ஆனால் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் எவ்விதமான பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. இதனால் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார்கள் மட்டும் அல்லாமல் 2021ல் அனைத்து ஆடம்பர பொருட்களின் விற்பனையும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை.

 சீனா மற்றும் அமெரிக்கா

சீனா மற்றும் அமெரிக்கா

சீனா மற்றும் அமெரிக்கா உட்படப் பெரும்பாலான பிராந்தியங்களில் ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களின் விற்பனை வரலாறு காணாத சாதனைகளையும் எட்டியது. கொரோனா தொற்று நோய் உலக நாடுகளைப் பெரிய அளவில் பாதித்தது மட்டும் அல்லாமல், பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது.

 உலகப் பணக்காரர்கள்

உலகப் பணக்காரர்கள்

இதே காலகட்டத்தில் உலகப் பணக்காரர்கள் மத்தியில் செலவு செய்ய அதிக வருமானம் கிடைத்த காரணத்தால் உலகளவில் பிரீமியம் மற்றும் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.

 ஒரு வருடம்

ஒரு வருடம்

சந்தையில் டிமாண்ட் அதிகரித்த காரணத்தால் ரோல்ஸ் ராய்ஸ் தொழிற்சாலைகள் முழு வேகத்திலும் முழுமையாகவும் இயங்கி வருகிறது. இதன் மூலம் நீங்கள் இன்று ஒரு ரோல்ஸ் ராய்ஸை ஆர்டர் செய்தால், இன்னும் ஒரு வருடம் கழித்து அதை டெலிவரி செய்ய எதிர்பார்க்கலாம்" என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிஇஓ முல்லர்-ஓட்வோஸ் கூறினார்.

 ஸ்பெக்டர் கார்

ஸ்பெக்டர் கார்

இதற்கிடையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறுவதற்கு உறுதியளித்துள்ளது. கடந்த அக்டோபரில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகனமான ஸ்பெக்டர்-ஐ 2023 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்குக் கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolls Royce sees record sales in 117 years of history

Rolls Royce sees record sales in 117 years of history 117 வருட வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோல்ஸ் ராய்ஸ்..!
Story first published: Friday, January 14, 2022, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X