கெட்டுப்போன டாடா கையில் 3 விமான நிறுவனங்கள்.. சுப்பிரமணியன் சாமி டிவீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா தனது விமானச் சேவை பிரிவைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், 70 வருடங்களுக்குப் பின்பு ஏர் இந்தியாவைத் தாய் வீட்டுக்கு அழைத்து வரும் பொருட்டுக் கடும் வர்த்தக நெருக்கடிக்கு மத்தியில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றியது.

 

டாடா குழுமத்திடம் ஏற்கனவே ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா என்ற இரு விமான நிறுவனங்கள் இருக்கும் வேளையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றியதன் மூலம் உள்நாட்டு விமானச் சேவையோடு சர்வதேச விமானச் சேவையையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிரடி ட்வீட்களுக்குப் பெயர்போன சுப்பிரமணியன் சாமி டாடா குறித்தும், டாடா கட்டுப்பாட்டில் இருக்கும் 3 விமான நிறுவனங்கள் குறித்தும் முக்கியமான டிவீட் செய்துள்ளார்.

 அழுகிப்போன டாடா

அழுகிப்போன டாடா

கெட்டுபோன டாடா கையில் தற்போது ஏர் ஏசியா, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங்களை இயக்குவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்துள்ளது. இதில் முதல் நிறுவனங்கள் ஏற்கனவே மோசமான (Royal Mess) நிலையில் உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, விரைவில் ஏர் இந்தியாவும் எனச் சுப்பிரமணியன் சாமி டிவீட் செய்துள்ளார்.

 ஏர் இந்தியா

ஏர் இந்தியா

டாடா சமீபத்தில் தான் ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை பிரிவை ஒன்றாக இணைத்து விமானப் போக்குவரத்து சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட விஸ்தாராவை ஏர் இந்தியா உடன் இணைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 டாடா குழுமம்
 

டாடா குழுமம்

ஒருபக்கம் டாடா ஏர் இந்தியாவை மீண்டும் புகழின் உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், உலக நாடுகள் மத்தியில் மீண்டும் ஏர் இந்தியா விமானச் சேவையைத் தலைநிமிரச் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள வேளையில் சுப்பிரமணியன் சாமி-யின் டீவீட் அதிர்ச்சி அளித்துள்ளது.

 டாடாவுக்கு ஆதரவு

டாடாவுக்கு ஆதரவு

சுப்பிரமணியன் சாமி-யின் டிவீட்-க்கு எதிராகப் பலர் டாடாவுக்கு ஆதரவாக டிவீட் செய்துள்ளனர். அதில் சங்கல்ப் என்பவர் ஏன் இந்தியாவுக்கு நல்லது செய்யும் டாடா பக்கம் செல்கிறீர்கள், அரசு சொத்துக்களை மிகவும் குறைவான விலையில் கைப்பற்றும், வரி செலுத்தாமல் ஏமாற்றும் அதானி, அம்பானி போன்றோர் மீது விமர்சனம் வைக்க மாட்டிறீர்கள் எனப் பதில் அளித்துள்ளார்.

 பொறாமை காட்டுகிறது..

பொறாமை காட்டுகிறது..

இதேபோல் காமென் மேன் என்பவர் சுப்பிரமணியன் சாமி உங்கள் மீது மரியாதை உள்ளது, ஆனால் ரத்தன் டாடா குறித்த இந்தக் கமெண்ட் பொறுப்பற்ற ஒன்றாக உள்ளது. டாடா குழுமம் இதுவரை 22 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்தியாவுக்கும் இந்திய மக்களும் நன்கொடையாகக் கொடுத்துள்ளது. இந்த டிவீட் டாடா குழுமம் மீது உங்களுடைய பொறாமை காட்டுவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rotten Tata now runs 3 airlines Air Asia, Vistara, Air India says Subramanian Swamy in Twitter

Rotten Tata now runs 3 airlines Air Asia, Vistara, Air India says Subramanian Swamy in Twitter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X