இது சூப்பர் விஷயமாச்சே.. ராயல் என்ஃபீல்டின் அசுர வளர்ச்சி.. அர்ஜென்டினாவில் முதல் அசெம்பிளி ஆலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு காலத்தில் புல்லட் என்றாலே ஒரு தனி மரியாதை. ஏனெனில் தங்களை கம்பீரமாக காட்டிக் கொள்ள ஆண்கள் பயன்படுத்திய ஒரு சாதனம் புல்லட்கள் தான். அந்த வகையில் இன்றைய காலகட்டத்திலும் ராயல் என்ஃபீல்டு என்றால் அப்படி ஒரு கெத்து.

 

என்னதான் பல பைக் மாடல்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், இன்றைய இளைஞர்களிடையே மிகவும் விரும்பப்படும் ஒரு இருசக்கர வாகனம் என்றால் அது ராயல் என்ஃபீல்டு தான்.

பெயரில் உள்ள ராயல் என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு மிக ராயலாக இருக்கும் ராயல் என்ஃபீல்டின், அசுர வளர்ச்சியினை பற்றித் தான் பார்க்கப் போகிறோம் வாருங்கள்.

ஜிடிபி தரவுகள்: எந்த துறை எவ்வளவு சரிந்து இருக்கிறது? ஜிடிபி தரவுகள்: எந்த துறை எவ்வளவு சரிந்து இருக்கிறது?

வெளிநாட்டில் முதல் அசெம்பிளி ஆலை

வெளிநாட்டில் முதல் அசெம்பிளி ஆலை

இதுவரை சென்னையில் மட்டும் தனது உற்பத்தியினை செய்து கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது அர்ஜென்டினாவில் தனது முதல் அசெம்பிளி ஆலையை நிறுவப் போவதாக அறிவித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதற்காக உள்ளூர் நிறுவனமான க்ரூபோ சிம்பாவுடன் இணைந்து இந்த ஆலையை தொடங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

 ஆரம்பத்தில் மூன்று மாடல்கள் மட்டும் அசெம்பிளி

ஆரம்பத்தில் மூன்று மாடல்கள் மட்டும் அசெம்பிளி

க்ரூபோ சிம்பா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே ராயல் என்ஃபீல்டின் உள்ளூர் டிஸ்டிரிபியூட்டராகவும் இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டின் வரலாற்றில் அண்டை நாட்டில் நிறுவப்படும் முதல் ஆலையாகவும் உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் ராயல் என்ஃபீல்டின் மூன்று மாடல்களை அசெம்பிள் செய்யும் என்றும் கூறியுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் மிகப்பெரிய சந்தை
 

ராயல் என்ஃபீல்டின் மிகப்பெரிய சந்தை

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 உள்ளிட்ட மூன்று மாடல்களின் உற்பத்தியானது இந்த மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நடுத்தர அளவிலான மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் சந்தைகளில் அர்ஜென்டினாவும் ஒன்றாகும். கடந்த மார்ச் 2018ல் முதல் சில்லறை கடையை விரிவு படுத்திய இந்த நிறுவனம், தற்போது 5 இடங்களில் நிறுவியுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் 40 இடங்களில் பிரத்யேக விற்பனை

லத்தீன் அமெரிக்காவில் 40 இடங்களில் பிரத்யேக விற்பனை

அதோடு லத்தீன் அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு ஒட்டுமொத்தமாக பிரத்தியேகமாக 40 சில்லறை வர்த்தக கடைகளை கொண்டுள்ளது. இது குறித்து ராயல் என்ஃபீல்டின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கே தசரி கூறுகையில், நடுத்த அளவிலான எடையுள்ள மோட்டார் சைக்கிள் பிரிவினை உலகளவில் வளர்க்கவும், விரிவுபடுத்தவும் ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகின்றது.

இது முதல் ஆலை தான்

இது முதல் ஆலை தான்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எங்களது வளர்ச்சியினை சர்வதேச அலவில் கணிசமாக வளர்த்துள்ளோம், குறிப்பாக முக்கியான சந்தைகளில் எங்கள் வளர்ச்சி கணிசமாக அதிகரித்து வருகின்றது. தற்போது 60 நாடுகள் எங்களது சில்லறை விற்பனையை கொண்டுள்ளோம். ஆக வளர்ந்து வரும் சந்தை தேவையினை பூர்த்தி செய்யவும், குறிப்பிடத்தக்க சந்தை நன்மைகளை பெறுவதற்கும், தென் அமெரிக்காவில் எங்களது அசெம்பிளி ஆலைகளை அமைக்கிறோம். அதன் ஒரு பகுதியாக தற்போது அர்ஜென்டினாவில் முதல் ஆலையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராயல் என்ஃபீல்டுக்கு முக்கிய சந்தை

ராயல் என்ஃபீல்டுக்கு முக்கிய சந்தை

அதோடு தென் அமெரிக்கா நாடுகள் ராயல் என்ஃபீல்டுக்கு ஒரு முக்கிய சந்தையாக உள்ளதாகவும், கடந்த 2018ல் இருந்து சில்லறை விற்பனையை தொடங்கியதில் இருந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் மிக முக்கியமாக மூன்று சந்தைகள் உள்ளன. ஒன்று கொலம்பியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை கொண்டுள்ளதாகவும் தசரி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Royal Enfield’s first outside plant launched in Argentina

Royal Enfield’s first outside plant launched in Argentina. This plant will locally assemble 3 models
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X