பாப்கார்ன் மூலம் ரூ.1 கோடி வருமானம்.. 24 வயது காதல் ஜோடியின் கலக்கலான வெற்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாப்கார்ன் யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தா பாட்டி விரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ்.

அதுவும் தியேட்டருக்கு போய்விட்டு பார்கார்ன் சாப்பிடாமல் வந்தால் தல தளபதி படம் கூட மொக்கையாகத் தான் இருக்கும். இந்த அளவிற்கு இந்திய மக்களையும் பார்கார்ன்-ஐ இணைத்துள்ளது என்றாலும் மிகையில்லை.

7Eleven இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி.. 2 நாளில் புதிய கடை..! 7Eleven இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி.. 2 நாளில் புதிய கடை..!

இந்தியா

இந்தியா

இப்படிப்பட்ட ஒரு ஸ்னாக்-ஐ இதுவரை இந்தியாவில் யாரும் பெரிய அளவில் வர்த்தகம் செய்யவில்லை என்பது தான் உண்மை. சீனா, தென் கொரியா, தைவான் நாடுகளில் பல சுவை, வண்ணங்களில் பாப்கார்ன்-ஐ உருளைக்கிழங்கு சிப்ஸ் போல் அதிகளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறனர்.

 பிஸ்னஸ் கேப்

பிஸ்னஸ் கேப்

இந்தியாவில் பாப்கார்ன்-க்கு இருக்கும் பிஸ்னஸ் கேப்-ஐ புரிந்துகொண்ட 24 வயதான ராகுல் பாண்டே, தனது கேர்ள் பிரண்ட் உடன் இணைந்து பாப்கார்ன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கினார். 5 வருடத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெற்றி அடைந்துள்ளார்.

ராகுல் பாண்டே
 

ராகுல் பாண்டே

இந்தியாவில் அனைத்து இடத்திலும் கிடைக்கும் அதே பார்ப்காரன்-ஐ விற்பனை செய்வதில் எவ்விதமான புதுமையும் இல்லை என்பதால் ராகுல் பாண்டே மற்றும் அவரது கேர்ள் பிரண்ட் ஆன சோனல் இணைந்து கோர்மெட் பார்ப்கார்ன் தயாரித்து நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

முதலீடு திரட்டல்

முதலீடு திரட்டல்

இதற்கான முதலீட்டை திரட்டை வெளியில் செல்ல விரும்பாத ராகுல் பாண்டே தனது தந்தையிடமே முதலீட்டைப் பெற்றார். ராகுல் பாண்டே-வின் தந்தை FMCG நிறுவனத்திற்கு அட்டை பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்த காரணத்தால் போதுமான பணம் அவரிடம் இருந்து பெற்ற முடித்து. மேலும் ராகுல் பாண்டேவும் இத்தொழிலை துவங்க அதிக ஆர்வம் காட்டியதாலும் அவருடைய தந்தை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டார்.

20 லட்சம் ரூபாய் முதலீடு

20 லட்சம் ரூபாய் முதலீடு

ஒரு வழியாகத் தந்தையிடம் முதலீட்டை பெற ஒப்புதல் பெற்ற ராகுல் சுமார் 20 லட்சம் ரூபாய் முதலீட்டில் Batcaves Gourmet popcorns என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.

இந்த நிறுவனம் சாதாரணமாகக் கிடைக்கும் பாப்கார்ன்-ஐ செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில் ஆரம்பம் முதல் சாக்லேட், பஞ்சுமிட்டாய், பிஸ்தா எனப் பல சுவையில் பாப்கார்ன் தயாரிக்கத் துவங்கினர்.

Batcaves Gourmet popcorns

Batcaves Gourmet popcorns

Gourmet popcorns பிரிவில் சுவைகளின் எண்ணிக்கை மிகவும் என்பது மட்டும் அல்லாமல் அதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் Batcaves Gourmet popcorns நிறுவனத்தைத் துவங்கும் போது இந்தியாவில் இதுபோன்ற நிறுவனங்கள் இல்லை என்பதைச் சந்தை ஆய்வின் மூலம் கண்டுபிடித்த பின்னர் ராகுல் சோனல் துவங்கியுள்ளனர்.

சவால்கள்

சவால்கள்

பேட்கேவ்ஸ் நிறுவனத்தைத் துவங்கிய போது இதற்கான சந்தையைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தாலும், படிப்படியாக வர்த்தகம் உயர துவங்கியுள்ளது. தற்போது பேட்கேவ்ஸ் நிறுவனத்தின் இரு கடைகள் கொல்கத்தாவில் உள்ளது. இதேபோல் அச்சாம் மாநிலத்தில் சில முக்கியமான சினிமா தியேட்டர்களில் பேட்கேவ்ஸ் நிறுவன தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 ராகுல் பாண்டே படிப்பு

ராகுல் பாண்டே படிப்பு

சிஏ படித்துக்கொண்டு இருந்த ராகுல் பாண்டே தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவைத்து 2014ல் பேட்கேவ்ஸ் நிறுவனத்தைத் துவங்கி அதற்கான பணிகளில் முழு நேரமாக இறங்கு துவங்கினார். 2015ல் முதல் முறையாக 1100 சதுரடியில் கொல்கத்தாவில் உற்பத்தியைத் துவங்கினார் ராகுல்.

12 சுவையில் பாப்கார்ன்

12 சுவையில் பாப்கார்ன்

பேட்கேவ்ஸ் நிறுவனத்தின் கோர்மெட் பாப்கார்ன் தயாரிப்பைத் துவங்கும் போதே 6 ஊழியர்களை வைத்து சுமார் 12 சுவையில் தயாரிக்கப்பட்டது. இதில் 6 இனிப்பு வகை 6 காரம் மற்றும் உப்பு சுவை கொண்டவை, இதன் மூலம் அனைத்துத் தரப்பு சுவை விரும்பிகளையும் ஈர்க்க முடியும்.

கியோஸ்க் விற்பனை

கியோஸ்க் விற்பனை

2015ல் உற்பத்தியை துவங்கிய 5 மாதத்தில் நேரடி விற்பனைக்கு முன்பு வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும்
கியோஸ்க் (Kiosk) மூலம் கோர்மெட் பாப்கார்ன்-ஐ விற்பனை செய்ய ராகுல் திட்டமிட்டார், இதன் பிடி கொல்கத்தாவில் இருக்கும் சிட்டி சென்டர் மாலில் விற்பனையைத் துவங்கினார்.

முதல் வியாபாரம்

முதல் வியாபாரம்

60 ரூபாய் முதல் சுவைக்கு ஏற்றார் போல் விற்பனை துவங்கப்பட்ட நிலையில் கியோஸ்க் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 7000 ரூபாய்க்கு பாப்கார்ன் விறக்பட்டதாகக் கூறுகிறார் ராகுல். சந்தையில் வெறும் 5 ரூபாய்க்குக் கிடைக்கும் பாப்கார்ன் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது அதன் தரம் மற்றும் சுவை மிகவும் முக்கியம்.

திருமணம்

திருமணம்

வர்த்தகம் வேகமாக வளர வளர, ராகுல் மற்றும் சோனல்-ம் திருமணம் செய்துகொண்டனர். 5 வருட வர்த்தகத்தில் பேட்கேவ்ஸ் கோர்மெட் பாப்கார்ன் நிறுவனத்தின் ஆண்டு டர்ன்ஓவர் 1 கோடி ரூபாய் அளவை தொட்டு உள்ளது.

காதல் - பிஸ்னஸ் வெற்றி

காதல் - பிஸ்னஸ் வெற்றி

பாப்கார்ன் மூலம் எவ்வளவு பிஸ்னஸ் செய்ய முடியும் என நினைப்போருக்கு இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியாக மட்டும் அல்லாமல் வியப்பாகவும் இருக்கும். 20 லட்சம் முதலீட்டில் வருடம் 1 கோடி ரூபாய் வர்த்தகம் என்றால் சாதாரணம் இல்லை.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பின் உழைப்பு மட்டும் அல்லாமல் ராகுல் சோனல்-ன் காதலும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.1 crore Popcorn Business: 24yr old Rahul - Sonal Lovers built together

Rahul - Sonal builts Rs.1 crore turnover popcorn business: Lovers turned to be business partners
Story first published: Saturday, October 9, 2021, 18:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X