எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் renewable எனர்ஜி துறைக்கு உதவும் வகையில் ஜப்பான் நாட்டின் ஜப்பான் பாங்க் பார் இண்டர்நேஷனல் கோ ஆபரேஷன் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை எஸ்பிஐ வங்கி மற்றும் என்டிபிசி நிறுவனத்துடனும் செய்துள்ளது.

இதனால் ஜப்பான் வங்கிக்கு என்ன லாபம்..? மிகப்பெரிய லாபம் இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் வர்த்தக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருக்கும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹோண்டா, யமஹா, சுசூகி, டோயோட்டா, ஈசுசூ, நிசான் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபம் கிடைக்கப்போகிறது.

பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..!பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..!

எஸ்பிஐ டீல்

எஸ்பிஐ டீல்

ஜப்பான் பாங்க் பார் இண்டர்நேஷனல் கோ ஆபரேஷன் எஸ்பிஐ வங்கியுடன் சுமாப் 1 பில்லியன் டாலர் அதாவது 7,400 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியாளர்கள், விற்றபனை பிரிவுகள், சப்ளையர்கள் மற்றும் டீலர்களுக்குக் கடன் கொடுக்கவும், இதேபோல் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார்களை வாங்க கடன் கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

என்சிபிசி

என்சிபிசி

இதேபோல் 50 பில்லியன் ஜப்பான் .யென் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்டத்தை என்டிபிசி நிறுவனத்துடன் செய்துள்ளது. இந்தக் கடன் ஒப்பந்தம் மூலம் என்டிபிசி சோலார் பவர் திட்டங்களுக்கும், உபகரணங்கள் நிறுவுவதற்கும் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிக்கையை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

எஸ்பிஐ உடனான கடன் ஒப்பந்தம் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியைப் பயன்படுத்த முடியும்.

இந்தக் கடன்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பயன்படும் என்பது தான் கவனிக்க வேண்டியது.

 

இந்திய ஆட்டோமொபைல் சந்தை

இந்திய ஆட்டோமொபைல் சந்தை

2019ஆம் ஆண்டில் உலகளவில் ஆட்டோமொபல் சந்தையில், இந்தியா சந்தை 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் பகுதி ஜப்பான் உற்பத்தி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் இத்தகைய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் வரும் வர்த்தகம்

மீண்டும் வரும் வர்த்தகம்

லாக்டவுன் மூலம் ஏற்பட்ட வர்த்தகச் சரிவில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தை மீண்டும் வரும் வேளையில் செப்டம்பர் மாதம் சுமார் 26.45 சதவீத வளர்ச்சியை இந்திய பயணிகள் வாகன விற்பனை சந்தை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பான் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ள 1 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 11,000 crore Loan Agreement with SBI and NTPC By JBIC

Rs 11,000 crore Loan Agreement with SBI and NTPC By JBIC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X