கங்கையை சுத்தப்படுத்த ரூ.30,000 கோடி.. எந்த அளவுக்கு பயன் தரும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கங்கை நதியை சுத்தப்படுத்த ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் கங்கை நதியை முழுமையாக சுத்தப்படுத்த முடியுமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் கங்கை நதியை சுத்தப்படுத்தும் முயற்சிகள் சாத்தியம்தான் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..? தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?

கங்கை நதி

கங்கை நதி

1986 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இதனை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 'நவாமி கங்கா' என்ற திட்டத்தை தொடங்கி கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடியை கடந்து 2015ஆம் ஆண்டு ஒதுக்கியது.

சுத்திகரிப்பு

சுத்திகரிப்பு

முதல் கட்டமாக கங்கை நதிக்கு வரும் கழிவு நீரின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மாசு கண்காணிப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுகாக செலவு செய்யப்பட்டது. மேலும் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் செலவு செய்யப்பட்டது. இருப்பினும் கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்று விட்டோமா? என்ற சந்தேகம் தான் இன்னும் ஏற்படுகிறது.

ரூ.30,000 கோடி நிதி
 

ரூ.30,000 கோடி நிதி

இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த தற்போது மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தெரிவித்துள்ளார். நமது இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தேவை ஆகியவை ஒரேமாதிரியாக உள்ளன என்றும் இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப புவியியல் பரந்த தன்மை, மட்டுப்படுத்தப்பட்ட நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள் கட்டமைப்புகள்

உள் கட்டமைப்புகள்

கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ஏராளமான உள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று, ரூ.30,000 கோடி ரூபாய் அளவில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

கங்கை நதியை ஒட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கங்கை நதியில் கழிவுகள் கலக்க கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

உரிய பலன் கிடைக்குமா?

உரிய பலன் கிடைக்குமா?

கங்கை நதியை சுத்தப் படுத்துவதற்காக ஏற்கனவே 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 30 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த செலவுகளுக்கு உரிய பலன்கள் கிடைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

வாரணாசியின் ஹீரோ

வாரணாசியின் ஹீரோ

கங்கை நதியை காப்பாற்றுங்கள் என்ற இயக்கத்தைச் சேர்ந்த ரமா ரவுதா இதுகுறித்து கூறியபோது, 'கங்கை நதியைச் சுத்தம் செய்வதில் பிரதமர் மோடியின் திட்டம் வெற்றியடைந்து விட்டால் அவர் வாரணாசியின் ஹீரோ ஆகிவிடுவார் என்று தெரிவித்தார். ஆனால் கங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக படகு ஓட்டி வரும் ஒருவர், 'கங்கையின் நிலையில் எந்த ஒரு மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை என்று எதிர்மறை கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 30,000 crore sanctioned to clean Ganga says Jal Shakti Minister Shekhawat

Rs 30,000 crore sanctioned to clean Ganga says Jal Shakti Minister Shekhawat | கங்கையில் கொட்டப்படும் ரூ.30,000 கோடி.. எந்த அளவுக்கு பயன் தரும்?
Story first published: Wednesday, August 17, 2022, 14:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X