300 ஆண்டுகளில் கிடைத்த விலை மதிப்புள்ள வைரம்... மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த வைரங்களில் மிகவும் விலை மதிப்புள்ள வைரம் ஆக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வைரம் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள அங்கோலா என்ற நாட்டில் கிடைத்துள்ள இந்த விலை மதிப்புள்ள வைரம் இந்திய மதிப்பில் சுமார் 550 கோடி ரூபாய் வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை மதிப்புள்ள வைரம் மற்றும் இதற்கு முன் கிடைத்த விலை மதிப்புள்ள வைரங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..! ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..!

மிகப்பெரிய வைரம்

மிகப்பெரிய வைரம்

மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இளஞ்சிவப்பு வைரம், 300 ஆண்டுகளில் மிகப்பெரியது என்றும் இதன் மதிப்பு ரூ. 550 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அங்கோலா

அங்கோலா

மத்திய அமெரிக்காவின் அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இளஞ்சிவப்பு வைரமானது கடந்த மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் மீட்கப்பட்ட மிகப்பெரிய வைரமாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளி லுகாபா டயமண்ட் கோ தெரிவித்துள்ளது.

இளஞ்சிவப்பு வைரங்கள்

இளஞ்சிவப்பு வைரங்கள்

வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் அங்கோலா அரசுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. வைர வர்த்தக நிறுவனமான சோடியம் நடத்தும் சர்வதேச டெண்டர் மூலம் இந்த வைரம் விரைவில் ஏலத்தின் மூலம் விற்கப்படும் என தெரிகிறது.

லூகாபா டயமண்ட் நிறுவனம்

லூகாபா டயமண்ட் நிறுவனம்

லூகாபா டயமண்ட் நிறுவனம் அளித்த அறிக்கையில், வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளது. இயற்கைக் கற்களின் அரிய மற்றும் தூய்மையான வடிவங்களில் ஒன்றான டைப் IIa வைரத்தின் கண்டுபிடிப்பு இது என்றும் கூறப்பட்டுள்ளது.

 சாதனை விலையில் விற்கப்படும்

சாதனை விலையில் விற்கப்படும்

இந்த விலை மதிப்புள்ள வைரம் சர்வதேச டெண்டரில் விற்கப்படும் என்றும், இது திகைப்பூட்டும் விலையில் ஏலத்தொகை இருக்கும் என்றும், இதன் உண்மையான மதிப்பை உணர வெட்டி மெருகூட்டப்படும்போது அதன் எடையில் 50 சதவீதத்தை இழந்தாலும் இந்த வைரம் சாதனை விலைக்கு விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 ஹாங்காங் வைர ஏலம்

ஹாங்காங் வைர ஏலம்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹாங்காங் வைர ஏலத்தில் 59.6 காரட் பிங்க் ஸ்டார் என்ற வைரம் ரூ.568 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது. இன்றுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள வைரம் இந்த சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அங்கோலாவின் கனிம வள அமைச்சர்

அங்கோலாவின் கனிம வள அமைச்சர்

அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ அவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரம் குறித்து கூறியபோது, 'வைரச் சுரங்கத்தில் அங்கோலா ஒரு முக்கிய இடத்தை ஒரு வைரத்தால் பெற்றுள்ளது என்றும், வளர்ந்து வரும் வைர சுரங்கத் தொழிலில் எங்களது அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெகுமதி' என்றும் கூறினார்.

கடந்த காலத்தில் கிடைத்த வைரங்கள்

கடந்த காலத்தில் கிடைத்த வைரங்கள்

முன்னதாக மார்ச் 2022ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளை வைரம் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வைரம் 30 மில்லியன் டாலர்களைப் பெறலாம் என்று கூறப்பட்டாலும் அந்த வைரம் ஏலம் போனதா, இல்லையா என்பது தெரியவில்லை.

 தி ராக் வைரம்

தி ராக் வைரம்


'தி ராக்' என்று பெயரிடப்பட்ட பேரிக்காய் வடிவ வைரமானது 228.31 காரட்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வைரம் மிகவும் அரிதானது என்றும் இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்டது என்பதும், இதுவரை ஏலம் விடப்பட்ட மிகப்பெரிய வெள்ளை வைரம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வைரம் ரூ.145 கோடிக்கு ஏலம் போனது.

 5 மில்லியன் வைரம்

5 மில்லியன் வைரம்

2022ஆம் ஆண்டு ஜனவரியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட வைரமானது அதன் விற்பனைக்கு முன்னதாக முதல் முறையாக பொது காட்சிக்கு வைக்கப்பட்டது. அது ஐந்து மில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 555 காரட் வைரம்

555 காரட் வைரம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் அரிய கருப்பு கார்பனாடோ வைரம் காட்சிப்படுத்தப்பட்டது. 555 காரட் கொண்ட இந்த வைரமானது 2.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை விண்கல் அல்லது சிறுகோள் தாக்கியபோது உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வைரமும் விரைவில் ஏலத்துக்கு வரவுள்ளது.

ஊரடங்கில் வேலையிழந்த நண்பர்கள்.. ரூ.10 கோடி சம்பாதித்தது எப்படி தெரியுமா? ஊரடங்கில் வேலையிழந்த நண்பர்கள்.. ரூ.10 கோடி சம்பாதித்தது எப்படி தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.550 crore worth Rare Pink Diamond Found In Central US, Largest In 300 Years!

Rs.550 crore worth Rare Pink Diamond Found In Central US, Largest In 300 Years! | 300 ஆண்டுகளில் கிடைத்த விலை மதிப்புள்ள வைரம்... மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X