விஸ்வரூப வளர்ச்சியில் RuPay.. கவலையில் அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசின் தேசிய பேமெண்ட் கார்பரேஷ்ன் ஆப் இந்தியா அமைப்பின் கார்டு நெட்வொர்க் ஆன RuPay தற்போது இந்திய பற்று அட்டை வர்த்தகச் சந்தையில் சுமார் 60 சதவீத வாடிக்கையாளர்களைப் பெற்று பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

டிசம்பர் 1 முதல் வரவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்.. கவனித்துக் கொள்ளுங்கள்..! டிசம்பர் 1 முதல் வரவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்.. கவனித்துக் கொள்ளுங்கள்..!

 RuPay சந்தை ஆதிக்கம்

RuPay சந்தை ஆதிக்கம்

2017ல் வெறும் 15 சதவீதமாக இருந்த RuPay சந்தை ஆதிக்கம் தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆனால் வர்த்தகம் மற்றும் பணப் பரிமாற்ற அளவில் அமெரிக்க நிறுவனங்களான மாஸ்டர்கார்டு, விசா பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

 RuPay கார்டு பிரச்சனை

RuPay கார்டு பிரச்சனை

சந்தையில் RuPay கார்டு எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும், அதைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றம் செய்யும் அளவீடுகளை ஒப்பிடும்போது மாஸ்டர்கார்டு, விசா பெரிய அளவில் ஆதிக்கம் செய்கிறது. இந்த மாறுபட்ட நிலைக்கு என்ன காரணம்.

 இந்திய அரசு
 

இந்திய அரசு

இந்திய அரசு RuPay கார்டு-ஐ நேரடியாக ஆதரித்து தங்களது வர்த்தகத்தைக் குறைப்பதாக மாஸ்டர்கார்டு, விசா நிறுவனங்கள் நேரடியாக அமெரிக்க அரசிடம் குற்றம்சாட்டியது. இதில் குறிப்பாகப் பிரதமர் மோடி அரசு RuPay கார்டு இந்திய அரசின் சேவை என்ற பெயரில் அளிக்கப்படும் காரணத்தால் பெரிய அளவில் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியது.

 பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தில் துவங்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளுக்கும் மத்திய அரசு RuPay கார்டு-ஐ தான் வழங்கியது. இது சந்தையில் பெரும் ஆதிக்கத்தை RuPay தளத்திற்கு உருவாக்கியது.

 90 கோடி டெபிட் கார்டு

90 கோடி டெபிட் கார்டு

இந்தியாவில் தற்போது 90 கோடி டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது, இதில் 31.74 டெபிட் கார்டுகள் RuPay டெபிட் கார்டு. இதன் மூலம் டெபிட் கார்டு பிரிவில் மட்டும் RuPay சுமார் 34.5 சதவீத சந்தையைப் பெற்றுள்ளது.

 விசா மற்றும் மாஸ்டர்கார்ட்

விசா மற்றும் மாஸ்டர்கார்ட்

உலக நாடுகளில் பேமெண்ட் தளத்தில் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆதிக்கம் பெரிய அளவில் அதிகரித்த நிலையில், இதில் இருந்து மீண்டு வர சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அரசு சொந்தமாகப் பேமெண்ட் நெட்வொர்க்-ஐ உருவாக்க துவங்கியது. இது மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது.

 RuPay கார்டு மற்றும் யூபிஐ தளம்

RuPay கார்டு மற்றும் யூபிஐ தளம்

இந்தியாவில் RuPay கார்டு மற்றும் யூபிஐ தளம் மூலம் பேமெண்ட் சந்தையில் மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனங்களின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. உதாரணமாக 4 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு மாதத்தில் செய்யப்பட்ட கார்டு பணப் பரிவர்த்தனையும், தற்போது செய்யும் கார்டு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் RuPay கார்டு மற்றும் யூபிஐ தளம் மூலம் MDR கட்டணம் செலுத்த வேண்டியது குறைந்துள்ளது.

 கிரெடிட் கார்டு வர்த்தகம்

கிரெடிட் கார்டு வர்த்தகம்

மேலும் RuPay கார்டு கிரெடிட் கார்டு வர்த்தகப் பிரிவில் மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. மொத்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் வெறும் 20 சதவீத வர்த்தகத்தை மட்டுமே RuPay கார்டு மீதமுள்ளவை மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவனத்தில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RuPay captured 60 percent share of India’s card market in 2020, Visa and MasterCard worries

RuPay captured 60 percent share of India’s card market in 2020, Visa and MasterCard worries விஸ்வரூப வளர்ச்சியில் RuPay.. கவலையில் அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X