வரலாறு காணாத அளவு வீழ்ச்சியில் ரூபாய்.. ரூ.75 ஐ தொட்ட அவலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா தாக்கம் ஒரு புறம் எனில், அதைவிட மோசமாக வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம் மறுபுறம். இதனை எதிரொலிக்கும் விதமாக இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரம், ரூபாயின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி கண்டு வருகிறது.

ஆக கொரோனா தாக்கம் மக்களை தாக்கி வருகிறது எனில், கொரோனாவினை விட மோசமான ரூபாய் வீழ்ச்சி பொருளாதாரத்தினை பாதித்து வருகிறது. அதிலும் தற்போது இந்தியா இருக்கும் நிலையில், இந்த வீழ்ச்சியானது மீண்டும் அதள பாதளத்தினை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

75-ஐ ஆக சரிவு

75-ஐ ஆக சரிவு

சில பொருளாதார நிபுணர்கள் கடந்த வாரத்தில் கூறி வந்தனர். நிச்சயம் ரூபாயின் மதிப்பு 75 ரூபாயினை தொடலாம் என கூறினர். தற்போது அந்த வார்த்தை உண்மையாகும் விதமாக ரூபாயின் மதிப்பு 74.99 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சியாகும். நேற்றைய சந்தை முடிவில் 74.25 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலையில் 74.95 ரூபாயாக வீழ்ச்சியுடனே தொடங்கியது.

கடுமையான வீழ்ச்சி

கடுமையான வீழ்ச்சி

இந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 74.99 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 74.77 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 74.97 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பும், அமெரிக்கா டாலருக்கு எதிராக கடுமையாக சரிந்தது.

இது தான் காரனம்

இது தான் காரனம்

ஆக உலகின் மிகப்பெரிய முதன்மை பொருளாதார நாட்டில் தங்கள் முதலீடுகளை குவிக்க முற்பட்டதால், ஆசியாவில் உள்ள தங்களது நாணயங்கள், பத்திரங்கள் மற்றும் பங்குகளை விற்றதால் டாலர் ஆசிய நாணயங்களுக்கும் எதிராக உயர்ந்தது. இந்தியாவில் பரந்த டாலர் பலத்தைத் தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய பங்குகள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

ஏமாற்றம் அளித்த அறிக்கை

ஏமாற்றம் அளித்த அறிக்கை

மேலும் அவசரகால வட்டி விகிதத்தினை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அப்படி எல்லாம் வட்டி குறைப்பு இல்லை என ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது. மேலும் வட்டி குறைப்பு செய்யாததால் பத்திர விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இது சாதகமான விஷயம் தானே

இது சாதகமான விஷயம் தானே

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அடுத்த முடிவு ஏப்ரல் 3ம் தேதி வரவுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலைகள் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 27 டாலர்களாக குறைந்துள்ளது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான விஷயமாக கருதப்பட்டாலும், கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வந்த போதிலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதை காண முடிகிறது.

வீழ்ச்சி கண்டு வரும் சர்வதேச சந்தைகள்

வீழ்ச்சி கண்டு வரும் சர்வதேச சந்தைகள்

இப்படியாக ரூபாய்க்கு எதிராக பல சாதகமான விஷயங்கள் நடந்திருந்தாலும், அவற்றை முறியடிக்கும் விதமாக அனுதினமும் சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் ரூயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் கொரோனாவின் தாக்கம் தற்போது பன்மடங்கு அதிகரித்து வரும் இந்த நிலையில் இது உலகளவில் எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தும், இது ரூபாயின் மதிப்பில் எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தம் என்றும் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee fell against the US dollar to register record low at Rs.75

Sensex fell sharply today, dropping about 2,000 points while Nifty cracked below 8,000. At this same time rupee also declined Rs.74.97 against Us dollar.
Story first published: Thursday, March 19, 2020, 12:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X