ஓரே நாளில் ரூபாய் மதிப்பு 71 பைசா உயர்வு.. டாலர் ஆதிக்கத்தில் அடி.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 71 பைசா உயர்ந்து 80.69 ஆக இருந்தது.

இன்றைய ரூபாய் மதிப்பு உயர்வுக்கும், பங்கு சந்தை உயர்வுக்கும் ஓரே காரணம் தான். வல்லரசு நாடான அமெரிக்க சிபிஐ அதாவது சில்லறை பணவீக்க தரவுகளை முதலீட்டு சந்தைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மாறிய காரணத்தால் டாலர் இன்டெக்ஸ் வீழ்ச்சி அடைந்து இந்திய சந்தையில் புதிய முதலீடுகள் குவிந்த காரணத்தால் ரூபாய்ல மதிப்பு வலிமை பெற்றது.

ரெசிஷன் அச்சத்தால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தை மட்டுமே எதிர்கொண்டு உள்ளது, ஆனால் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்: FMCG துறையில் புதிய வர்த்தகம்.. 520 மில்லியன் வாடிக்கையாளர்கள்..! ரிலையன்ஸ் ரீடைல்: FMCG துறையில் புதிய வர்த்தகம்.. 520 மில்லியன் வாடிக்கையாளர்கள்..!

ரூபாய் மதிப்பு உயர்வு

ரூபாய் மதிப்பு உயர்வு

இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பின் உயர்வுக்கு அமெரிக்கச் சில்லறை பணவீக்க தரவுகள் மட்டுமே காரணம் இல்லை, இந்திய நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள், நிறுவனம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கணிப்பு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தடுமாற்றம் ஆகியவையும் இன்று ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

அந்நியச் செலாவணி

அந்நியச் செலாவணி

இன்றைய வர்த்தகத்தில் இண்டர்பேங்க் அந்நியச் செலாவணியில், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 80.76 இல் தொடங்கப்பட்டு, அதன் முந்தைய முடிவை விட 71 பைசா உயர்ந்து, 80.69 ஐ தொட்டது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 பைசா உயர்ந்து 81.40 ஆக இருந்தது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் வருடாந்திர அளவில் 7.7 சதவீத அளவில் உள்ளது, 2022 ஆம் ஆண்டில் இது தான் குறைவான பணவீக்க நிலையாக உள்ளது. ஜூன் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 9.1 சதவீத உயர்வைத் தொட்டது யாராலும் மறக்க முடியாது.

அமெரிக்கா

அமெரிக்கா

இதேபோல் அமெரிக்காவின் கோர் சிபிஐ அளவு 6.3 சதவீதமாக உள்ளது, ஆனால் இதில் உணவு மற்றும் எனர்ஜி பணவீக்கம் 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என IFA குளோபல் ரிசர்ச் அகடமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டாலர் ஆதிக்கம் குறைந்து டாலர் இன்டெக்ஸ் 105.00 அளவீட்டில் கடுமையான நிலையை எதிர்கொள்ளும்.

அமெரிக்கப் பங்குச்சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தை

இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் டாவ் ஜோன்ஸ் குறியீடு 3 சதவீதம் உயர்ந்து கடந்த சில வருடத்தில் மிகவும் சிறப்பான வர்த்தக நாள்-ஐ பதிவு செய்துள்ளது. இதேபோல் நாஸ்டாக் 6 சதவீதமும், எஸ் அண்ட் பி குறியீடு 4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பத்திர சந்தை மீதான லாபம் பெரிய அளவில் குறைந்தது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்த ஆண்டு அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் தொடர்ந்து வட்டியை அதிகரித்து வந்த நிலையில், பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை எதிர்கொண்ட நிலையில் தற்போது பணவீக்கம் சரிந்த நிலையில் பத்திர முதலீட்டுச் சந்தையில் இருந்து முதலீடுகள் திரும்பவும் பங்குச்சந்தைக்குச் சென்றுள்ளது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee gains 71 paise to 80.69 against USA dollar Amid USA CPI cools down

Rupee gains 71 paise to 80.69 against USA dollar Amid USA CPI data cools down check down complete details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X