அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ல் துவங்கி மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் வரையில் பல முன்னணி தொழிலதிபர்களின் விவாகரத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் பில்லியனர் விவாகரத்துச் செய்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 4வது முறையாக இந்தப் பணக்காரர் விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

ரூபர்ட் முர்டாக்
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பில்லியனரான ரூபர்ட் முர்டாக் தனது 91 வயதில் 4வது மனைவியான 65 வயதான முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால்-ஐ விவாகரத்துச் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீடியா
அமெரிக்கப் பில்லியனரான ரூபர்ட் முர்டாக் பாக்ஸ் கார்ப், அதன் தாய் நிறுவனமான பாக்ஸ் நியூஸ் சேனல், நியூஸ் கார் போன்ற பல நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்துள்ளார். ரூபர்ட் முர்டாக் மற்றும் ஜெர்ரி ஹால் விவாகரத்து மூலம் அவரது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனத் தெரிகிறது.

40 சதவீத பங்குகள்
ரூபர்ட் முர்டாக் தனது ரெனோ என்னும் குடும்ப நிறுவனத்தின் வாயிலாக நியூஸ் கார்ப் மற்றும் பாக்ஸ் கார்ப் ஆகிய நிறுவனத்தில் சுமார் 40 சதவீத பங்குகளை வைத்திருப்பது மட்டும் அல்லாமல் இரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் வாக்கு உரிமையைக் கொண்டு உள்ளார்.

17.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு
சுமார் 17.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் ரூபர்ட் முர்டாக் அமெரிக்கா மட்டும் அல்லாமல் தனது கிளை மற்றும் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக உலகம் முழுக்க இருக்கும் மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சமீபத்தில் ரூபர்ட் முர்டாக் பாக்ஸ் பிளிம் மற்றும் டெலிவிஷன் ஸ்டூடியோஸ் மற்றும் இதர எண்டர்டெயின்மென்ட் வர்த்தகம், சொத்துக்களை வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்பனை செய்து பெரும் தொகையைத் திரட்டியுள்ளார்.

3 மனைவிகள்
ரூபர்ட் முர்டாக் முதல் மனைவி விமானப் பெண் இவருடைய பெயர் பாட்ரிசியா புக்கர், இவரை 1966ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். இரண்டாவது மனைவி அன்னா முர்டோக் மான், இவர் ஸ்காட்லாந்து பத்திரிகையாளர் இவரை 1999ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். 3வது மனைவி தொழிலதிபரான வெண்டி டெங் 14 வருட திருமணத்திற்குப் பின்பு 2014ல் விவாகரத்துச் செய்தார்.

ஜெர்ரி ஹால் விவாகரத்து
இந்நிலையில் 4வது மனைவியான 65 வயதான முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால்-ஐ 6 வருட திருமணத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய உள்ளார். இந்நிலையில் 91 வயதாகும் ரூபர்ட் முர்டாக் 5வது முறை திருமணம் செய்துகொள்வாரா..?