ரஷ்யா - சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளாடிமிர் புதின் வல்லரசு நாடுகளின் கடுமையான தடைகள் உடைத்து தனது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அடுத்த 50 வருடத்திற்கான வளர்ச்சிப் பாதையை அமைக்கும் முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனாலேயே உலக நாடுகளுக்கு விளாடிமிர் புதின் பெரும் சவாலாகத் திகழ்கிறார்.

 

இந்நிலையில் ரஷ்யா - சீனா மத்தியிலான நட்புறவு, வர்த்தக உறவு ஆகியவை உக்ரைன் போருக்கு பின்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா - சீனா மத்தியில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான திட்டம் விரைவில் முடிய உள்ளது..

இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..! இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாயிலாகவே கட்டமைத்திருக்கும் காரணத்தால், உக்ரைன் போருக்கு பின்பு வல்லரசு நாடுகளின் தாண்டி எப்படிக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்பனை செய்வது, எப்படி விற்பனையை வேகப்படுத்துவது என்பதைத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு.

ரஷ்யா - சீனா பைப்லைன் திட்டம்

ரஷ்யா - சீனா பைப்லைன் திட்டம்

இதற்கிடையில் ரஷ்யா - சீனா மத்தியில் கட்டப்பட்டு வரும் எரிவாயு விநியோகம் செய்யும் பைப்லைன் திட்டம் உக்ரைன் போருக்கு பின்பு வேகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் விரைவில் முடிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Power of Siberia எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் மூலம் ரஷ்யாவின் சைபீரியா-வில் இருந்து சீனாவின் ஷாங்காய் பகுதி வரையில் எரிவாயு சப்ளை செய்யப்படுகிறது. v

8 வருடம்
 

8 வருடம்

சைபீரியா-வில் இருந்து சீனாவின் மேற்கு பகுதி வரையில் இணைக்கும், அதன் பின்பு இந்தப் பைப்லைன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் பகுதிகளை இணைக்கிறது. இந்த மாபெரும் திட்டம் சுமார் 8 வருடம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

எரிவாயு விநியோகம்

எரிவாயு விநியோகம்

இதில் சைபீரியா-வில் இருந்து சீனாவின் மேற்கு பகுதி வரையிலான எரிவாயு விநியோகம் டிசம்பர் 2019ல் துவங்கியது, சைபீரியா டூ ஷாங்காய் திட்டத்தின் நடுப்பகுதி டிசம்பர் 2020ல் துவங்கப்பட்டது. 2025ல் சைபீரியா டூ ஷாங்காய் வரையிலான Power of Siberia திட்டம் முழுமையாக இயங்க துவங்கும்.

விளாடிமிர் புதின் அரசு

விளாடிமிர் புதின் அரசு

ஐரோப்பா, பிரிட்டன் நாட்டைக் காட்டிலும் சீனாவில் அதிகப்படியான எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் டிமாண்ட் இருக்கும் காரணத்தால் சீன வர்த்தகத்திற்கு விளாடிமிர் புதின் அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

Power of Siberia திட்டம்

Power of Siberia திட்டம்

Power of Siberia திட்டத்தைப் போலவே ரஷ்யாவில் இருந்து மங்கோலியா நாட்டின் வாயிலாகச் சீனா வரையில் எரிவாயு விநியோகம் செய்யும் Power of Siberia 2 என்ற திட்டமும் முன்வைக்கப்பட்டு உள்ளது.

55 பில்லியன் டாலர் முதலீடு

55 பில்லியன் டாலர் முதலீடு

Power of Siberia திட்டத்திற்காக ரஷ்யா முதலீடு செய்துள்ள தொகை மட்டும் 55 பில்லியன் டாலர், இதேவேளையில் டிசம்பர் 2019 முதல் இன்று வரையில் Power of Siberia பைப்லைன் வாயிலாகச் சீனா, ரஷ்யாவிடம் இருந்து 3.81 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயு மட்டுமே வாங்கியுள்ளது. ஆனால் இத்திட்ட முடிவில் இதன் அளவு மிகப்பெரிய அளவில் உயரும் என ரஷ்யா நம்புகிறது.

இந்தியா - ரஷ்யா

இந்தியா - ரஷ்யா

இதேவேளையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகத்தை மேம்படுத்த ஈரான் வாயிலாகக் கச்சா எண்ணெய், ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் கப்பல் வாயிலாகக் கொண்டு செல்ல புதிய வழித்தடத்தை உருவாகியது ரஷ்யா.

 ஈரான் - ரஷ்யா

ஈரான் - ரஷ்யா

இதைத் தொடர்ந்து ரஷ்யா - ஈரான் மத்தியில் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய், எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தற்போது அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் தடையால் வாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஈரான் உடன் கைகோர்க்கும் ரஷ்யா.. ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு.. விளாடிமிர் புதின் ஸ்மார்ட்டான திட்டம்..! ஈரான் உடன் கைகோர்க்கும் ரஷ்யா.. ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு.. விளாடிமிர் புதின் ஸ்மார்ட்டான திட்டம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia and China: Power of Siberia massive gas pipeline begins deliveries in 2025; Vladimir Putin cash cow is safe

Russia and China: Power of Siberia massive gas pipeline begin deliveries in 2025; vladimir putin cash cow is safe ரஷ்யா - சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X